இடைத்தேர்தல் எண்ணிக்கை தமிழகம் சாதனை

இடைத்தேர்தல் எண்ணிக்கை தமிழகம் சாதனை

அதிகமான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பது தமிழ்நாட்டில் தான்.  அதிமுகலிருந்து பிரிந்து சென்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் அவர்களது தகுதி நீக்கம் உறுதிபடுத்தப்பட்டது. இதனால், அவர்கள்  18 பேரும் எம்.எல்.ஏ பதவியை இழந்தனர். இதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்  காலியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் ;மறைவால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மறைவால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது. ஆக மொத்தம்  20 இடைத்தேர்தலை சந்திக்க உள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது இதுவே முதல் முறையாகும்.

இதே போன்ற ஒரு சூழ்நிலை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிலிருந்து 17 எம்.எல்.ஏக்கள் YSR காங்கிரஸ்க்கு சென்ற போது ஏற்ப்பட்டது. எனினும், தமிழ்நாட்டில் தான் அதிகமான எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.