இதயத்திற்கு இதமளிக்கும் இந்திய ஸ்டன்ட்கள்

இதயத்திற்கு இதமளிக்கும் இந்திய ஸ்டன்ட்கள்

இதய வால்வ்களில் படிந்துள்ள கொழுப்பை அகற்ற தற்போது ஸ்டன்ட் முறை பரவலாக பயன்படுத்தபடுகிறது.  இந்த ஸ்டன்ட் மூலம் நோயாளியின் இதயத்திற்கு சிறிய பலூன் போன்ற பொருளை செலுத்தி அடைப்பு உள்ள இடத்தில் அதை விரிவடைய செய்வார்கள் இதனால், அங்குள்ள அடைப்பு தகர்க்கப்பட்டு இதயத்தில் ரத்த ஓட்டம் சீராகும். இந்த சிகிச்சையால் இதய நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது. ஆனால், இந்த ஸ்டன்ட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை மிகவும் அதிகமாகவும், சாமானிய மக்களால் பெற முடியாததாகவும் இருந்தது.

நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு,  கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய அரசு ஸ்டண்டுகளின் விலையை 75% குறைப்பதாக அறிவித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ஸ்டன்ட்களை விட தங்கள் ஸ்டன்ட்கள் தரமானவை என்றும் அதனால், குறைந்த விலையில் தரமுடியாது என்றும், மீறி விலையை குறைத்தால் ஸ்டன்ட் விற்பனையை நிறுத்திக்கொள்வதாகவும் அறிவித்தன.

இந்நிலையில், இந்திய ஸ்டன்ட்கள் வெளிநாட்டு ஸ்டன்ட்களை போலவே உயர் தரமுடையவை தான் என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ABBOTT விற்கும்  Xience ஸ்டன்ட்களை போலவே இந்திய தயாரிப்புகளான YUKON CHOICE PC மற்றும்  Supra Flex ஆகியவையும் தரமானவை தான் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

இனி இந்திய ஸ்டன்ட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியர்களின் இதயம் சீராக துடிக்கும்.