இதுதான் 'சென்னை டே' வா ? கதறும் சென்னை

இதுதான் 'சென்னை டே' வா ? கதறும் சென்னை

சென்னைக்கு பிறந்தநாளாம்! நாம் ஆங்கிலேயரிடம் விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் ஆனாலும் ஆங்கில கலாச்சாரத்தின் மீது தீராத காதலை கொண்டுள்ளோம் என்பதற்கு, ஒரு உதாரணம் 'மெட்ராஸ் டே'.  சென்னையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தவர் 'வின்சென்ட் டிசௌசா '. அந்த விழாவை நாம் தூக்கிப்பிடித்து கொண்டாடுவது நமது அடிமைப்பட்ட மனநிலையிலேயே காட்டுகிறது. 'பிரான்சிஸ் டே' என்ற ஆங்கிலேயர் சென்னப்ப நாயக்கரிடம் 1639ஆம் ஆண்டு சிறு நிலத்தை வாங்கி ஜார்ஜ் கோட்டையை காட்டினார். அந்நாளைதான் நாம் சென்னையின் பிறந்தநாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் முதலாம் நூற்றாண்டிலேயே சென்னை பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. பல்லவ, நாயக்க மன்னர்கள் இங்குள்ள கோவில்களுக்கு நன்கொடை வழங்கியதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. சென்னையே ஆங்கிலேயர் தான் உருவாக்கினார்கள் என்ற தவறான எண்ணம் சிலரிடம் உள்ளது. சென்னை பிறந்த நாள் விழா கொண்டாட்டமே 2004 இல் இருந்து தான் தொடங்கப்பட்டது என்று தெரிந்து கொள்வோம்.