இந்தியர்களுக்கு புதிய புனித தலம்

இந்தியர்களுக்கு புதிய புனித தலம்

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், டில்லியில், இந்தியா கேட் பகுதியில், தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், உயிர் தியாகம் செய்த, 25 ஆயிரத்து, 942 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 179 கோடி ரூபாய் செலவில், இது அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா கேட் பகுதியில் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய போர் நினைவிடம், இந்தியர்களுக்கு மேலும் ஒரு புனித தலமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இந்த நினைவிடத்திற்கு வந்து வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு போர் நினைவிடம் கட்டப்படும் என ஜனாதிபதி கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது அதை நிறைவேற்றியுள்ளது.