இந்தியாவின் தேசிய  பாதுகாப்பு  உத்திகள் – காங்கிரஸ் போடும் வேடம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகள் – காங்கிரஸ் போடும் வேடம்

21.04.2019ந் தேதி காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பற்றிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.  திருவாளர் டி.எஸ். ஹூடா தலைமையில் ப.சிதம்பரம், திரு.ஜெய்ராம்ரமேஷ்  உள்ளிட்டோர் அடங்கிய குழு தயாரித்த  அறிக்கையை வெளியிட்டார்கள்.   பல்வேறு விஷயங்களை பற்றி குறிப்பிட்டாலும், தேசப் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் போது, தேசப் பாதுகாப்பிற்கு ஐந்து தூண்கள் உள்ளன.  உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவுக்குறிய இடத்தை உறுதிப்படுத்துவது.  இந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது.  ஜம்மு – காஷ்மீர் விவகாரம் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது.  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.  தேசத்தின் திறன்களை பலப்படுத்துவது  என குறிப்பிட்டார்கள்.    ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் தேசத்தின் பாதுகாப்புக்கு என்ன வழி முறைகளை கையாண்டார்கள் என்பதை குறிப்பிட்டு, இதை வலியுறுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.   மேலே குறிப்பிட்டுள்ள கொள்கையை எந்த வழி முறையில் கொண்டு செல்வார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி குறியாகும்.

          இரண்டு விஷயங்களில் காங்கிரஸ் கட்சி செய்த மிகப் பெரிய தவறு, இன்று வரை தீர்வு காண இயலாத நிலை உருவாகியுள்ளது.  ஒன்று எல்லைப் பிரச்சினை, இரண்டாவது காஷ்மீர் விவகாரம்.  மேற்படி இரண்டு பிரச்சினைகளிலும் சிக்கலை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  ஐம்பதாண்டு காலம் ஆட்சியிலிருந்தும், அமைதியான முறையில் எந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என்பதை சற்றே திரும்பி பார்க்க வேண்டும்  சீனாவுடனும், பாகிஸ்தானுடனும், பங்களா தேஷ் நாட்டுடனும், மியான்மர் நாட்டுடனும் எல்லைப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு  எட்டவில்லை.  இந்நிலையில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொது, இலங்கை்கு தாரைவார்த்த கச்சத் தீவு பிரச்சினையும் அவ்வப்போது எழுகிறது. 

          நீண்ட காலமாகவே சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் விதமாக காங்கிரஸ் கட்சி நடக்கவில்லை.  ராஜீவ் காந்தி காலம் வரை சீனாவைப் பற்றி மதிப்பீடு தவறாகவே முடிந்துள்ளது.  இது பற்றி        ஆர்.கே. நாராயணன் ஒரு பத்திரக்கைக்கு பேட்டியளித்த போது  Unfortunately, India Prime Ministers since Rajiv Gandhi have neither assessed the disputed border as India’s core concer, nor understood the effect the border dispute has had on India’s rising stature.  கூறியது. 1960-ல் சூ யென்லாய் இந்தியாவிற்கு வருகை தந்த போது, எல்லைப் பிரச்சினையில் ஒரு தீர்வு காண வேண்டும் என விரும்பினார். நேரு தனது ஆலோசனை குழுவினருடன் விவாதம் செய்த போது, கிழக்கில் உள்ள குன் லூன் மற்றும் மேற்கில் உள்ள காரகோரம் பற்றிய பிரச்சனையையும் தீர்வு காண வேண்டும் என்ற போது, திரு. டி.என்.கவுல் ஆலோசனையின் படி காரகோரம் பகுதியின் எல்லையை பற்றி தற்போது பேச வேண்டாம் என்றவுடன், அனைத்து எல்லை பிரச்சினைகளையும் பேசிக் கொள்ளலாம் என பேச்சு வார்த்தை முழுமை பெறாமல், சூ யென் லாய்  திரும்பிய பின்னர் தான் 1962 போர் நடந்தது.

            உலகில் எந்த நாடும் சீனாவை அங்கீகரிக்கவில்லை.  30.12.1949-ல் இந்தியா முதன் முதலில் சீனாவை அங்கீகரித்தது.  இதற்கு உபயமாக, சீனா இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமான பகுதியான திபெத்தை 1950-ல் ஆக்கிரமிப்பு செய்த போது, நேருவால் தடுக்க இயலவில்லை.   20.1.1972-ல் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக உருவான பின்னரும் கூட, சீனா தங்களது தெற்கு திபெத் என கூறி அவ்வப்போது அத்துமீறல்களை நடத்துகிறது.  இந்தி சீனி பாய் பாய் என கட்டித் தழுவிய நேரு உயிருடன் இருந்த போது தான் 1962-ல் சீனா நம் மீது படையெடுத்து 24,000 ச.கி.மீ. தூர அக்சைய சென் பகுதியை ஆக்கிரமித்து கொண்டார்கள்.  ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி  அதை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 

                    சீனாவிற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க நேரு தயக்கம் காட்டினார்.   சீனாவிற்கு எதிராக ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஜெனரல் திம்மைய்யா விடுத்த கோரிக்கைக்கு ராணுவ அமைச்சர் திரு. கிருஷ்ண மேனன் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் மிகவும் அதிருப்தியடைந்த ஜெனரல் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நேருவிற்கு 3.8.1959-ல் அனுப்பி வைத்தார்.   சீனாவைப் பற்றிய மதிப்பீடுகளை நேருவும் அவரது சகாவான கிருஷ்ண மேனன் தவறாகவே கனித்தார்கள்.   திபெத்தை சீனா ஆக்கிரமித்தவுடன், தலாய் லாலா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.  அவருக்கு இந்திய புகலிடம் அளித்தது.  இதுவும் சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.  ஆனால் சீனாவைப் பற்றி  சர்தார் வல்லபாய் பட்டேலும், ஜெனரல் கரியப்பாவும் தெரிவித்த கருத்துக்களை புறகணித்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை தற்போது அனுபவித்து வருகிறோம்.   இது பற்றி தலாய் லாமா தனது   My Land and My People         என்ற புத்தகத்தில் மூன்று முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.  அதில் ஒன்று  ஆசியாவில் சீனா தனது மேலாதிக்கத்தை செலுத்த திபெத்தை ஒரு பகுதியாக கருதி ஆக்கிரமிப்பு செய்தது,   திபெத்தை விட்டு கொடுத்த வகையில் நேரு மிகப் பெரிய தவறை செய்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.  இதையெல்லாம் தெரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு கொடுத்துள்ள தேச பாதுகாப்பு பற்றி அறிக்கை சிரிப்புக்குறியதாக இருக்கிறது.

          சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது, நேரு எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமில்லை, அதற்கு ஆதரவான கருத்துக்களையும் முன் வைத்தார்.  Walter Crocker writes in ‘ Nehru : A Conterporary’s Estimate  என்ற புத்தகத்தில் ,  It was being said in Delhi in 1952-53 that Nehru, in private and semi-private, justified the Chinese invasion on Tibet.  என குறிப்பிட்டுள்ளது.   டாக்டர் ராஜேந்திர பிரசாத்  In the matter of Tibet, we acted unchivalrously, but even against our interest in not maintaining the position of a buffer state, for it had thus expose the frontier of 2,300 miles to the Chinese…..I have very strong feeling about it.  I feel that the blood of Tibet is upon us. என குறிப்பிட்டதையும்  மேலும் I hope I am not seeing ghosts and phantoms, but I see the murder of Tibet recoiling on India    எனவும் குறிப்பிட்டார். தற்போது கூற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையாகும்.   இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி என்பதை தற்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய மனசு இருக்கிறதா என்று தெரியவில்லை.  திபெத் இந்தியாவின் ஒரு அங்கம், சீனாவின் ஊடுருவிலை தடுக்க கூடிய பகுதி என்பதும், காஷ்மீர் மகாராஜா குலாப் சிங் காலத்தில் காஷ்மீருடன் இணைந்த பகுதி என்பதையும் மறந்து விட்டு நேரு செய்த தவறு என்பதையும் தெரிந்து கொண்டால், ப.சிதம்பரத்தின் பதில் வெளி வேசமாகும்.

          சூ என் லாய் இந்தியாவுக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பே வட எல்லை குறித்த வழககு உச்ச நீதி மன்றத்திற்கு வந்தது.  1958-ல் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கு ( பங்களா தேஷ் ) இடையே பல கிராமங்களை உள்ளடக்கிய பெருபாரி யூனியன் பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க நேரு ஒப்புக் கொண்டார்.   இந்தியாவுக்கு சொந்தமான பகுதியை பாகிஸ்தானுக்கு அளிக்கும் நேருவின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து, அன்றைய ஜனசங்கத்தைச் சார்ந்தவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 14.3.1960-ல், மத்திய அரசின் முடிவுக்கு தடை விதித்தது.  இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யாமல், இந்தியாவிற்கு சொந்தமான பகுதியை வேறு நாட்டுக்கு வழக்க மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெளிவாக தீர்ப்பு வழங்கியது.  இந்த தீர்ப்பில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் ஒப்பந்தமே செய்து கொண்டிருந்தாலும் என்ற வார்த்தையை பயன்படுத்தியது உச்ச நீதி மன்றம்.   ஆஸாத் காஷ்மீர் பகுதியை மீட்க முயலாமல், ஐ.நா.விற்கு கொண்டு சென்ற நேரு,  பெருபாரி யூனியன் பகுதியை தாரை வார்க்க ஒப்புக் கொண்டது, இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் லட்சனமா இது என காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும். 

          இன்று காங்கிரஸ் கட்சி எல்லைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுபவர்கள், 1960-ல்  செய்த சட்ட திருத்தத்தை செய்யும் போது, நேருவின் சர்வாதிகாரத்தை தட்டிக் கேட்க துணிவற்றவர்களாவே இருந்தார்கள்.  இந்தியாவிற்கு சொந்தமான எந்தப் பகுதியையும், எந்த நாட்டுக்கும் தன்னிச்சையாகத் தாரை வார்க்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை என அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சட்டத்தை திருத்த வேண்டுமானால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கும், சட்ட மன்றங்களில் சரி பாதிக்கு மேல் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே சட்ட திருத்தம் செய்து கொள்ள இயலும் என சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை நேரு கேட்கும் போது, கூறப்பட்டது.   எனவே பாகிஸ்தானுக்கு பெருபாரியை தாரை வார்க்க, பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா எவ்வித எதிர்ப்புமின்றியும்,  எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியிலிருந்த காரணத்தால், மாநில சட்ட மன்றங்களில் பாதிக்கு மேல் மசோதவிற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

          இதன் மூலம் பல்வேறு பகுதிகளை எல்லை நாடுகளுக்கு தாரை வார்த்து கொடுத்த காங்கிரஸ் கட்சி, 2019-ல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாகும்.

          இன்று பேச்சு வார்த்தை மூலம் எல்லைப் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என கூறும் காங்கிரஸ் கட்சி,   நேரு செய்த தவறுகளை எவ்வாறு திருத்த போகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.  இந்தியா சீன எல்லைப் பிரச்சினை  1846 – 1947 என்ற புத்தகத்தில், மவுன்ட் பேட்டன், ஆளுநர் அலுவல் என பெயரிட்ட அறிக்கையில், வடக்கு எல்லை, எல்லை வரையறுக்கப்படவில்லை என குறிப்பிட்டு ஒரு மேப்பை இணைத்திருந்தார்.  ஆனால் உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல்,  வெளியிட்ட வரைப்படத்தில் வடககு பகுதி எல்லை வரையரை என்பது  மக்கமில்லன் கோடு என தெளிவாக குறிப்பிட்டு வெளியிட்டார்.  ஆனால் 1954 ஜீலை மாதம் பஞ்சசீலா உடன்படிக்கையின் படி சீனாவின் எண்ணத்திற்கு ஏற்ப எல்லையை அமைத்து, அதன் வரைப்படத்தையும் வெளியிட்டமைக்கு ஒப்புதல் கொடுத்தவர் நேரு.  இந்த மிகப் பெரிய தவறை ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சரி செய்யும்.

           ஆங்கிலேயர்களின் சூழ்சிக்கு பலியான நேருவால், இன்று வரை பாகிஸ்தானுடன்  ஜம்மு – காஷ்மீர், ஆஸாத் காஷ்மீர், ஜில்ஜிட் பலூஸ்தான் எல்லை பற்றிய  முடிவு இன்னும் முற்றுப்  பெறாத பிரச்சனையாக இருக்கிறது.  1965 போருக்கு பின்னர்  பாகிஸ்தான் சீனாவிற்கு பிரச்சினைக்குறிய ஜில்ஜிட் பலூஸ்தானின் ஒரு பகுதியை  50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட போது அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத காங்கிரஸ் கட்சி, தற்போது எல்லையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உபதேசம் செய்கிறது.   காங்கிரஸ் கட்சி செய்த தவறு, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, சீனா தனது படைகளை எல்லையில் நிறுத்த முடிவு செய்தததை பாகிஸ்தான்  தடுக்கவில்லை, இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும் என  Roznama  Bang-e-Sahar  என்ற பலூஸ்தானிலிருந்து வெளியாகும் உருது பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.      

          காஷ்மீர் பிரச்சினையில் 1989லிருந்து கலவரங்களை உருவாக்க, பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அமைத்து கொடுத்து, நிதி உதவி செய்யும் நாடு பாகிஸ்தான். 1947-ம் வருடம் நவம்பர் மாதம் 2ந் தேதி நேரு அறிவித்த காஷ்மீரில் இந்தியப் படை நிரந்தரமாக இருக்காது, காஷ்மீரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற இரண்டு விஷயங்களுக்காக இந்தியா அனுபவித்து வரும் துன்பங்கள் பற்றிய சிந்தனை காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது, மேலும்   இன்று வரை பிரிவினைவாதிகள் இதை வைத்தே பிரிவினையை தூண்டுகிறார்கள்.  மற்ற சமஸ்தானங்களை போல் காஷ்மீர் மாநிலமும் இந்தியாவுடன் இணைந்த பின்னர் நேரு கொடுத்த வாக்குறுதி, வாக்கெடுப்பு எதற்காக நடத்த வேண்டும் என்ற கேள்வியை கேட்டவர்களை விமர்சித்தவர்கள், இன்று  பேச்சு வார்த்தை மூலம் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. கட்ச் பகுதியில் சிர்கிரிக் பகுதியில் உரிமை கொண்டாட துடிக்கும் பாகிஸ்தானை தடுக்க முயலாமல், பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குறிப்பிடுவது கேலிக்குறியதாகும்.

          தேசத்தின் திறன்களை பலப்படுத்துவது – ராணுவத்தை பலப்டுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் ஆர்வம் கிடையாது.  நேரு முதல் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுக்கு ஆயுத பேரங்களில் கொள்ளையடிக்க மட்டுமே, ராணுவ பலத்தைப் பற்றி விவாதிப்பார்கள்.  1950-ல் சீனா திபெத்தை ஆக்கிரமித்தவுடன், ஜெனரல் கரியப்பா, சீனாவினால் நமது எல்லையில் ஆபத்து சூழ்ந்து வருகிறது, என ராணுவத்தை பலப்டுத்த வேண்டும் என நேருவிடம் கேட்டப் போது நேருவின் பதில் திமராக இருந்தது.  மேற்படி சம்பவம், After the Chinese occupation of Tibet, Cariappa was keen to strengthen the country’s defences – with airfields, roads, and military camps – right up to the border with Tibet.  With this in mind, he met Nehru and told him that India should prepare itself militarily against China’s expansionist designs in the future.  Nehru flared up.  He told Cariappa that it was not the business of the commander-in-chief to tell the prime minister who was going to attack  where.  Cariappa was told to focus on Kashmir and Pakistan             என Dragon on our dorrstep  -  page 8    புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளது.    நேருவின் வழித் தோன்றல் என கூறிக் கொள்ளும் ராகுல் காந்தியிடம் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.  அறிக்கை அறிக்கையாகவே இருக்குமே தவிர  செயல்பாட்டிற்கு வராது என்பது திண்ணம்.

          ஐம்பதாண்டு காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, ராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்காமல்,  ராணுவ தளபதிகள் கொடுத்த ஆலோசனைகளை கூட கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்ததால் ஏற்பட்ட விளைவு , ஆஸாத் காஷ்மீர் என்றும், சீனாவிற்கு  அக்சைய் சென் பறி போனதும் கண்ணால் கண்ட சம்பவங்கள்.  நாட்டை படு குழியில் தள்ளியவர்கள் மீன்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கா நடத்தும் நாடகத்தின் ஒரு அங்கமே பாதுகாப்பு பற்றி அறிக்கையாகும். 

- ஈரோடு சரவணன்