இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலம்

இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலம்

இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலமான போகிபீல் பாலம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் டிப்ருகர்ரிலிருந்து அருணாசல பிரதேச பசிகாட் வரையில் பிரம்ம புத்திரா நதியின் மேல் 4.94கீமி நீளத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை மற்றும் ரயில் பாலமாகும் இது. 

மேலே மூன்று வழி சாலையும், கீழே இரண்டு வழி ரயில் பாதையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் நேற்று முன்தினம் ரயில் சேவை துவங்கப்பட்டது. முதலில் சரக்கு ரயில் பயணம் துவக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பயணியர் ரயில் போக்குவரத்தும் துவக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்,"இது ரயில்வே துறையின் வரலாற்றில் சிறப்பு மிக்க நாள்." என்று குறிப்பிட்டுள்ளார்.