இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலம்  - பிரதமர் திறந்து வைத்தார்

இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலம் - பிரதமர் திறந்து வைத்தார்

இந்தியாவின் மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலமான போகிபீல் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலம் டிப்ருகர்ரிலிருந்து அருணாசல பிரதேச பசிகாட் வரையில் பிரம்ம புத்திரா நதியின் மேல் 4.94கீமி நீளத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை மற்றும் ரயில் பாலமாகும் இது. 

மேலே மூன்று வழி சாலையும், கீழே இரண்டு வழி ரயில் பாதையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை திறந்து வைத்த பிரதமர் டிப்ருகர்ரிலிருந்து டேமாஜி வரை இந்த பாலத்தில் பயணம் செய்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலைச்சர் சர்பானந்த சோனோவால், அஸ்ஸாம் ஆளுநர் ஜகதீஷ் முகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படம் உதவி : ANI