இந்தியாவில்  முஸ்லீம்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்

இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்

இந்தியாவில் மற்ற சிறுபான்மையினர் போன்றே முஸ்லீம்களும் பாதுகாப்பாகவே உள்ளனர் என ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் கிரிஷ்ண கோபால் தெரிவித்துள்ளார். 

முகலாய அரசர் 'தாரா ஷிகோ' வின் பண்பாட்டு கலாச்சார சேவையை பற்றிய கருத்தரங்கில் பேசிய அவர்  நாட்டில் 16 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் உள்ளனர், அவர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.  குறைந்த எண்ணிக்கையில் உள்ள கிறித்தவர்கள், ஜைனர்கள் பாதுகாப்பாக உணரும்பொது பின்னர்  முஸ்லீம்கள் மட்டும் ஏன் பயம் கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.  

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியபோது  "ஒளரங்கசீப் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி,  ஆனால் அவர் சகோதரர் தாரா ஷிகோ ஹிந்து, முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறார்" என்று கூறினார்.