இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.

 காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு தருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். G-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரோன் 'காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மற்றும் இறையாண்மையை சார்ந்தது அதில் எந்த நாடும் தலையிடக்கூடாது. காஷ்மீர் விவகாரத்தில் நங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தான் இதனை தீர்க்கவேண்டும்.  பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும்' இவ்வாறு அவர் கூறினார். அடுத்ததாக பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐயும் சந்திக்கவுள்ளார் என கூறபடுகிறது .