இந்தியாவுக்கு வர பயமாக இருக்கிறது

இந்தியாவுக்கு வர பயமாக இருக்கிறது

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடி, அவர் விசாரணைக்கு இந்தியாவிற்கு வந்தால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தான் அஞ்சுவதாக கூறியுள்ளார். 5அடி உயரமுள்ள தன் உருவ பொம்மை எரிக்கப்பட்டதாகவும், தான் நாட்டிற்குள் நுழைந்தால் தன்னை கொன்று விடுவார்கள் என்றும் அவர் தன் வழக்கறிஞர் மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

எனினும், அமலாக்கத்துறை இதை மறுத்துள்ளது. அவர் உண்மையிலேயே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதினால் போலீஸில் புகார் பதிவு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.