இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டரை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டரை விற்க அமெரிக்கா ஒப்புதல்

பல்வகை பயன்பாட்டுக்கான எம்எச்-60 ‘ரோமியோ’ சீஹாக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2.4 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும். இந்த வகை ஹெலிகாப்டர்கள், எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டறிந்து தகர்க்கவும், கடல் பகுதிகளில் ரோந்து மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ‘சீ கிங்’ ரக ஹெலிகாப்டர்களைத்தான் இந்தியா தற்போது பயன்படுத்தி வருகிறது. அவற்றுக்கு மாற்றாக ‘சீஹாக்’ ரக ஹெலிகாப்டர்கள் இருக்கும். ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புப் படையின் பலம் அதிகரிக்கும். அத்துடன், இந்த ஹெலிகாப்டர்களை விற்பதன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு மேலும் பலப்படும்.

இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.