இந்தியா கொண்டு வரப்பட்டார் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கின்  முக்கியப்புள்ளி

இந்தியா கொண்டு வரப்பட்டார் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கின் முக்கியப்புள்ளி

2010் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற வி.வி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.  காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு ஊழல்கள் நடைபெற்றதாக கூறி பாஜக அரசு ரத்து செய்தது,   சிலர் கைது செய்யப்பட்டனர்.

3,600 கோடி ரூபாய் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர்  ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு தப்பி சென்றார். அவர் இருக்கும் இடத்தை இன்டர்போல் உதவியுடன் கண்டறிந்த இந்தியா அவரை இங்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டது. தொடர் முயற்சியால் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த ஐக்கிய அரபு நாடுகள் ஒப்புக்கொண்டது. இந்தியாவிலிருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சி.பி.ஐ இணை இயக்குனர் சாய் மனோகர் ஆகியோரின்  முயற்சிகளினால் துபாயில் நீதித்துறை நடைமுறைகள் முடிவடைந்து நேற்று அவர் புது தில்லி கொண்டு வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.