இந்தியா பதிலடி - எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பு

இந்தியா பதிலடி - எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினார். இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

அத்தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் இந்திய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது.

இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடிபொருள் வீசப்பட்டதாகவும், தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.