இந்தியா மீது கை வைக்காதே, தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது கை வைக்காதே, தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் சீனாவிடம் பேசி, "இந்தியாவை கண்டியுங்கள்" என்றது.  அதற்கு சீனா மறுப்பு தெரிவித்து விட்டது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட செய்தி குறிப்பில், "தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதில், முதலில் தங்கள் நாட்டில் செயல்படும்  பயங்கரவாத அமைப்புக்கள் மீது தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை தொலைப்பேசியில் அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இது குறித்து விரிவாக பேசியுள்ளார்.