இந்திய அரசியலில் இரண்டு பொய்யர்கள்

இந்திய அரசியலில் இரண்டு பொய்யர்கள்

பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்ற உறுதியுடன் தேர்தல் களத்தை சந்திக்க புறப்பட்டுள்ள இரண்டு பேர்கள் உலா வருகிறார்கள்.   ஒருவர் அகில இந்திய பொய்யர்கள் கட்சியின் தலைவர் திருவாளர் ராகுல் காந்தி, மற்றொருவர் தமிழகத்தில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஒரு மொழியின்  பெயரலாலும், ஒரு இனத்தின் பெயராலும் மாய்மால வார்த்தைகளை பயன்படுத்தி கொள்ளையடித்த கூட்டத்தில் இரண்டாம் கட்ட தலைவர் திருவாளர் ஸ்டாலின்.   ராகுல் காந்தியை இன்னும் சில தினங்கள் கழித்து பிரதமர் பதவிக்கு வர இருப்பவர் என ஸ்டாலின் கூற, அடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் என ராகுல் காந்தி கூற கவுண்டமனி, செந்தில் காமெடியை விட வேறு காமெடி தேவையில்லை என்பது போல் ஒரு கச்சேரி நாகர்கோவிலில் நடந்துள்ளது.  இரண்டு பொய்யர்களைப் பற்றிய விரிவான விளக்கங்களை பார்க்கலாம்.

          ராகுல் காந்தி -  தான் படித்த படிப்பையே பொய்யாக மாற்றி கொடுத்தவர்.  இவரது குடும்பத்தின் உண்மை தன்மையையும் மூடி மறைத்து, நேருவின் வாரிசாக காட்டிக் கொண்டு திரிபவர்.  புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் எங்கெல்லாம் சந்தர்பங்கள் கிடைக்குமோ அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும், இதில் காங்கிரஸ் எழுப்ப விரும்பும் கேள்வி, மக்களையும், ராணுவத்தையும் பாதுகாப்பதில் அரசு என்ன செய்தது.   பாகிஸ்தான் குண்டு வீச்சை நிகழ்த்த முடியாத அளவுக்கு என்ன தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தது?  இந்த கேள்விக்கு பதில் கூறுவதற்கு முன், பாகிஸ்தானை வளர்த்து விட்டவர்கள் யார் ?   ஐந்தாண்டுகளில் மோடி அரசு எல்லையில் நடக்கும் பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்பதை மறந்து விட்டு ஒப்பாரி வைக்க கூடாது.  புல்வாமாவில் நடத்தி தாக்குதலை மட்டுமே விவாதிக்கும் ராகுல் காந்தி, 2044 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்து போது நடத்தப்பட்ட தாக்குதல்களை பற்றிய விவரங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும்.

          தீவிரவாதத்தை பற்றி திருவாளர் ராகுல் காந்தி பொதுச் செயலாளராக இருந்த போது, ஒரிஸ்ஸாவில் சுற்றுப் பயனம் மேற்கொண்ட சமயம், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,  It is very difficult to stop every single terrorist attack.  The idea is that we have to fight terrorism at the local level.  But terrorism is something that is impossible to stop all the times.   என்று கூறியவர் தான் தற்போது மோடியை கேள்வி கேட்கிறார்.

          தன்னை நேருவின் வாரிசாக காட்டிக் கொள்ளும் ராகுல் காந்தி இதற்கு முறையான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.   2004 முதல் 2014 மே மாதம் வரை ஆட்சிக் கட்டிலில் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.   இந்த பத்தாண்டு காலத்தில் நடந்த மிகவும் மோசமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.  இந்த சம்பவங்களை தடுக்க காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை ராகுல் காந்தியால் கூற முடியுமா?   20.10.2005ந் தேதி திருவாளர் ராகுல் காந்தி குடியிருந்து டெல்லியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால்  பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 70 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  இந்த சம்பவத்திற்கு பின் அப்பாவி பொது மக்களை காப்பாற்ற திருவாளர் மன்மோகன் சிங் என்ன நடவடிக்கையை எடுத்தார்.  இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் குறிப்பாக 2008-ம் வருடம் ஜெய்ப்பூர் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 63 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.   செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள வியாபர பகுதிகளில் வெடித்த குண்டு வெடிப்பில் 33 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  என்ன நடவடிக்கையை எடுக்க ராகுல் காந்தி மன்மோகன் சிங்கிடம் பேசினார் என்பதை தற்போது வாக்காளருக்கு தெரிவிப்பாரா என்பதையும் விளக்க வேண்டும்.

           அஸ்ஸாம் மாநிலத்தில் 30.10.2006-ல் நடந்த வெடி குண்டு தாக்குதலில், 81 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 470 பேர்கள் படுகாயமடைந்தார்கள்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் குண்டு வைத்தவர்கள் யார் என்பதை கண்டு பிடித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.  இதை தடுக்க முன் நடவடிக்கை ஏன் மன்மோகன் சிங் எடுக்கவில்லை.  பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திருவாளர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் இது பற்றி வாய் திறந்து பேசினாரா?  பத்து ஆண்டில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகள் என்ன என்பதையும் ஆய்வு செய்தால்,  தற்போது பேசுவதற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது என்பது நன்கு தெரியும்.

          இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து விட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதை மறந்து விட்டு, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக பொது மேடைகளில் பொய் பேசுகிறார்.  2004லிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி.  சொந்த தொகுதி அமேதியாக இருந்தாலும் வாசம் செய்வது டெல்லியில்,  தான்  வசிக்கும் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, அதுவும் மத்தியில் ஆட்சியிலிருந்த போதும், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த சமயம் டெல்லி ஆட்சியும் இவர்களின் கீழ் இருந்த போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  இது பற்றி கட்சிக்குள் முழு விசாரனை அல்லது விவாதம் நடத்தப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும்.

          மசூத் அசாரை விடுவித்தது பா.ஜ.க. அரசு என ஒரு பொய்யை கூறிவருகிறார்.  நடந்த உண்மையை நன்கு தெரிந்து கொண்டு பேச வேண்டும்.  ராகுல்  காந்திக்கு அரசியல் பாடம் நடத்தும் அறிவுஜீவிகள், உண்மையை மறைத்து விட்டு, பொய்யான செய்தியை உருவாக்கி கொடுப்பது சரியானதா என்றும் பார்க்க வேண்டும்.   1999- டிசம்பர் மாதம் கடத்தப்பட்டது காட்மாண்டுவிலிருந்து கடத்தப்பட்டது.  176 பயனிகளை காக்க வேண்டி, சர்வ கட்சி கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது.  சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருமதி சோனியா காந்தி, சரத்பவார் மற்றும் இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்.  இவர்கள் அனைவரும் மசூத் அசாரை விடுவித்து, பயனிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கையை வைத்தார்கள், ஆர்.எஸ்.எஸ். மட்டுமே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள்  என்பதை மறந்து விட்டு ராகுல் காந்தி பா.ஜ.க.வின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார். 

          தற்போதைய மோடியின் ஆலோசகராக இருக்கும் அஜித்தோவால் மீதும் ஒரு புதிய பொய்யை கூறியுள்ளார்.  1999-ல் விமான கடத்தலின்  போது, மசூத் அசாரை பாதுகாப்பாக  அழைத்து சென்றவர் இன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவால் என்கிறார். (You would remember that during their (NDA) last govt. current National Security Adviser Ajit Deval went to Kandahar to hand over Masood Azar. )  இது முற்றிலும் தவறான செய்தியாகும்.  1999-ல் சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால் என்பதை கூட முழுமையாக தெரிந்து கொள்ளாமல்,  வாயில் வந்தப் படி உளர வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் ராகுல் காந்திக்கு தெரியாது.  பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் கௌல், அஜித் தோவால் மசூத் அசாரை விடுவிக்க ஒப்புதல் தரவில்லை என தெரிவித்தார், பேச்சு வார்த்தையின் மூலம் நாட்களை கடத்தி, பின்னர் தாக்கலாம் என்றார்.  திருவாளர் ராகுல் காந்தி கேள்வி கேட்க வேண்டிய ஒருவர் இருக்கிறார்.  விடுவிப்பதற்கு முன் கன்டகாரில் பேச்சு வார்ததை நடத்த சென்றவர் அஜித் தோவால்.  ஆப்கானிஸ்தான் தாலிபானின் கட்டுப்பாட்டிலிருந்தது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், பொய்யான தகவல்களை கொடுப்பதில் ராகுல் காந்தி கில்லாடி.  1999-ல் விமான கடத்தலின் போது, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்தவர் உமர் அப்துல்லா.  உமர் அப்துல்லா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை தற்போதைய கூட்டணியில் உள்ள உமர் அப்துல்லாவிடம் கேட்க வேண்டும்.

          இரண்டாவது மிகப் பெரிய பொய், பா.ஜ.க. அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.   நதிகள் இணைப்பு  என்பது சாத்தியமில்லை என திருவாய் மலர்ந்தவர் ராகுல் காந்தி.  தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கும்,  வட மாநிலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் போது, கடல்களில் கலக்கும் நீரை திருப்பி விடும் திட்டத்திற்கும், காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து 10 வருடங்களில் என்ன திட்டங்களை கொண்டு வந்தது என்பதை ராகுல் காந்தி கூற வேண்டும்  அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியின் போது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.  அத் திட்டத்தை கிடப்பில் போட்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும்.

          திருவாளர் ராகுல் காந்தி 2004-ல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவர்.  2004 முதல் 2009 வரை ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவாசயிகளின் தற்கொலை எண்ணிக்கை என்னவென்று  தெரியுமா?  2004-ல் 18241 விவாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.  2009-ல் 16,196 விவசாயிகள் உள்ளிட்ட 85,260 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.  இந்த தற்கொலைக்கு காரணத்தை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், 2009 முதல் 2014 வரை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.  இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 72,857 பேர்கள்.  இதைப் பற்றி எப்பொழுதாவது ராகுல் காந்தி விவாதித்துருப்பாரா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

          ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ60,000 கோடிக்கு விவாசய கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.  ஆனால் உண்மையில் 2007க்கு முன் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைத்தது.  பெருவாரியான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .  தயவு செய்து ராகுல் காந்தி 2013-ம் வருட அறிக்கையை படித்து பார்க்க வேண்டும். 

          விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திரு சாமிநாதன் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  தனது அறிக்கையை கொடுத்து பல ஆண்டுகள் கழிந்து பின்னர் கூட, கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயலவில்லை.  இன்று விவசாயிகளுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ராகுல் காந்தி.   மரபணு விதைகளை அறிமுகப் படுத்தி, நூற்றுக்கணக்கான ஆந்திர விவசாயிகளை கடனாளியாக்கிய கட்சி காங்கிரஸ் கட்சி, பி.டி. காட்டன், பி.டி.கத்தரிக்காய் என அந்நிய நாட்டு மோகத்திற்கு அடிமையானதால், காங்கிரஸ் கட்சியின் சொல்படி கேட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி பேசி வருகிறார்.

          ஒரு இதழில் எழுதியது தற்போது நினைவுக்கு வருகிறது.  ராகுல்காந்தி பேசுவதில் பாதி உண்மை மீதி பொய், உண்மையில் கூட முழுவதும் உண்மையில்லை என எழுதியது முற்றிலும் உண்மையாகும். 

- ஈரோடு சரவணன்