இந்திய கடற்படை தினம்

இந்திய கடற்படை தினம்

இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளில் ஒன்றான இந்திய கடற்படை உலகிலேயே வலிமை வாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகும். இந்த படை நமது கடல் எல்லைகளை பாதுகாப்பதுடன், பேரிடர் சமயங்களில் உதவுவது, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, ஆகிய பணிகளையும் செய்து வருகிறார்கள். 

இந்திய கடற்படை தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குடியரசு தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில்,"இந்திய கடற்படையின் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இந்த நாடு, நம் கடல் எல்லைகளை பாதுகாக்கும் உங்கள் அற்பணிப்பு, மனிதநேயம் ஆகியவற்றிற்காக  பெருமை கொள்கிறது." என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி,"கடற்படைக்கு இந்தியா நன்றி செலுத்துகிறது. வீரமிக்க இந்திய கடற்படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இந்திய கடற்படை தின வாழ்த்துக்கள். நமது தேசத்தை பாதுகாப்பதற்கும், பேரிடர் காலங்களில் பார்ட்டும்படியான உங்கள் சேவைக்கும் இந்த நாடு நன்றி செலுத்துகிறது." என்று கூறியுள்ளார்.