இந்திய கப்பற்படையின் முன்னோடி மறைந்தார்

இந்திய கப்பற்படையின் முன்னோடி மறைந்தார்

இந்திய கப்பற்படையின் முன்னோடியாக திகழ்ந்தவரும், பல சாகச செயல்களுக்கு சொந்தக்காரருமான இந்திய கப்பற்படையின் முன்னாள் வைஸ் அட்மிரல் மனோகர் பிரகலாத் அவாதி நேற்று அவரது பிறந்த ஊரான சதாரா மாவட்டம் வின்சுருணியில் காலமானார். அவருக்கு வயது 91.

1945ம் ஆண்டு இந்திய கப்பற்படையில் சேர்ந்த இவர் சமிக்கைகளை துல்லியமாக கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1971ம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலை போரின் போது சிறப்பான சேவையாற்றினார். இவரது வீரத்தையும், தலைமை பண்பையும் இந்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்தது.

மனோகர் பிரகலாத் அவாதியின் மறைவிற்கு இந்திய கப்பற்படை தலைவர் சுனில் லன்பா, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.