இந்திய 'குவில்ட்' திருவிழா

இந்திய 'குவில்ட்' திருவிழா

முன் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் சில இடங்களில் வீட்டில் பாட்டிகள் தங்கள் மென்மையான நூல் புடவைகளை ஒன்றோடு ஒன்று அடுக்காக வைத்து தைத்து குழந்தைகளுக்கு கீழே விரிப்பதற்கும், போர்த்திக்கொள்ளவும் பயன்படுத்துவார்கள்.  இவை குளிர் காலத்தில் கதகதப்பாக இருப்பதற்கு உதவும். இதே போல் வடிவமைக்கப்பட்டவை தான் 'குவில்ட்'  எனப்படும் கனமான போர்வைகள். இவை முன்பு இந்தியாவின் எல்லா இடங்களிலும் பரவலாக இருந்தன. ஆனால், இப்போது வட மாநிலங்களில் மட்டும் காணப்படுகின்றன. 

இந்த குவில்ட்களை மக்களிடம் பிரபலபடுத்தும் பொருட்டு வர்ஷா,டீனா,தீபா என்ற மூன்று பெண்கள் இணைந்து "quilt india foundation" என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் குவில்ட்கள் பற்றிய ஆராய்ச்சிகள், குவில்ட்கள் தைக்க கற்றுக்கொடுப்பது என்று குவில்ட்களை குறித்த பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். குவில்ட்களுக்காக பல நாடுகளிலும் திருவிழாக்கள் நடந்து வருகின்றன.

முதல் முறையாக இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 25, 26, 27ம் தேதிகளில் 'குவில்ட் திருவிழா' நடக்க உள்ளது. இந்த திருவிழாவால் நம் நாட்டின் பாரம்பரியங்க்களுள் ஒன்றான குவில்ட்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும், குவில்ட் கண்காட்சி, குவில்ட் செய்யும் போட்டி என பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றை பற்றி www.indiaquiltfestival.com என்ற இணைய தளத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம்.