இந்திய பாகிஸ்தான் எல்லையில் மாறும் மக்கள் தொகை

இந்திய பாகிஸ்தான் எல்லையில் மாறும் மக்கள் தொகை

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் அடிப்படைவாத முஸ்லீம்களின்  மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், இது கவனிக்க வேண்டிய விஷயம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் சமீபகாலமாக மற்ற சமூகத்தினருடன் கலந்து பழகுவதை தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும், அவர்கள் இந்திய பழக்கங்களிலிருந்து விலகி அரேபிய இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற துவங்கியிருப்பதாகவும் தெரிகிறது. அங்கிருந்த ராஜஸ்தானிய வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு பலர் தங்கள் நடையுடை பாவனைகளில் அரேபிய பாணிக்கு மாறியிருப்பதாக கூறுகிறார்கள். 

மற்ற சமூக மக்கள் தொகையில் 8 - 10 சதவிகிதம் உயர்வு கண்டிருக்கிறது ஆனால், முஸ்லீம்கள் மக்கள் தொகையில்   22 - 25 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. பொக்ரான், மோகன்கர்ஹ ஆகிய பகுதிகளுக்கு உத்திரப்ரதேசத்திலிருந்து அடிக்கடி முஸ்லீம் மதகுருமார்கள் வந்து செல்வதாகவும், அவர்கள், நாம் தனித்தன்மையானவர்கள், நமக்கு தனி அடையாளம் வேண்டும் என்றும், மத மேலாதிக்க எண்ணங்களை பரப்புவதாகவும் கூறப்படுகிறது. 

திடீரென்று முஸ்லீம்கள் சுற்றுவட்டாரத்திலுள்ள நிலங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தியிருப்பது இந்துக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுவரையில், மத கலவரங்களோ, பாகிஸ்தான் ஆதரவு போக்கோ காணப்படவில்லை எனினும், இந்த மாற்றம் அசாதாரணமானதாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்த பத்திரிக்கை செய்தி கூறுகிறது.