இந்திய பிரதமர்க்கு மொரிஷியஸ் பிரதமர் பாராட்டு

இந்திய பிரதமர்க்கு மொரிஷியஸ் பிரதமர் பாராட்டு

வெளிநாடு வாழ் இந்தியர்களின் 15வது மாநாட்டை உத்திரப்ரதேச மாநிலம் வாரணாசியில் துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மாநாட்டில் பிரதமர் பேசும்போது,"ஊழலை ஒழிப்பதற்கும், கருப்பு பணத்தை மீட்பதற்கும் தமது அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறினார். "மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் 5,80,000  கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டிருக்கிறது." என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதுகெலும்பாக விளங்குவதாகவும் பிரதமர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் சுக்நத்,"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் உலகளவில் பாராட்டை பெற்றுள்ளது." என்று கூறினார்.