இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் தேவை

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் தேவை

­­­­­­ சச்சின் யார் என்று கேட்டால் ஐந்தாவது படிக்கும் பாலகனுக்கு தெரியும், சச்சின் சிவா யார் என்று கேட்டால், பலருக்கும் தெரியாது.


சச்சின் சிவா, இவரும் இந்திய அணி கிரிக்கெட் வீரர். பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக 4 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆம், இந்திய உடல் ஊனமுற்றோர் (physically challenged ) கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இவர். நேபாள் நாட்டுடனான போட்டியில் பங்கேற்க காத்மாண்டு சென்றுள்ளார். 

இந்திய அணி 3 மாதங்களுக்கு முன்பு உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது, ஆனால் பலரின் கவனத்திற்கு வராமலே போனது துரதிருஷ்டம்.

அவருடன் நமது நண்பர் தொலைபேசியில் பேசியதன் வாயிலாக கிடைத்த தகவல்கள் 

3 மாதங்கள் முன்பு நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள போதிலும் பெரிதாக பொருளுதவி கிடைக்கவில்லை.

Physically challenged தமிழக அணிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தான் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தந்துள்ளார்.

தேசிய அணியில் விளையாட்டு வீரர்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் sponsor தேவைப்படுகிறது, கிடைக்காத பட்சத்தில் சொந்த பணத்தில் பிரயாணம் செய்கின்றனர். 

பலருக்கு நிலையான வேலை இல்லை. நாட்டிற்காக விளையாடுகிறோம் என்கிற ஒரே ஆர்வத்தில் பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு விளையாடுகிறார்கள்

உலககோப்பை வென்றதற்காக ஊக்க தொகை தருகிறோம் என்று BCCI இரு தினங்களுக்கு முன்பு கூறியுள்ளது , ஆனால் எவ்வளவு, எப்போது என்று தகவல் எதுவும் இல்லை.

தமிழக அமைச்சரை சந்தித்த போது, stipend மட்டும் தருகிறோம் என்று கூறியுள்ளார், ஆனால் அந்த தொகை வைத்து போட்டிகளில் கலந்துக்கொள்வது சாத்தியம் இல்லாதது.

பிராயண செலவுக்கும் நண்பர்கள் பண உதவியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய அணியில் விளையாடினாலும், sports quota வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. போட்டிகளில் பங்கேற்க வெளியூர்செல்லவேண்டியுள்ளதால், தனியார் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்புக்கொள்ளவும் 


சிவா : 9677779277