இந்திய முஸ்லீம்கள் தேசபக்தி கொண்டவர்கள்..!

இந்திய முஸ்லீம்கள் தேசபக்தி கொண்டவர்கள்..!

இந்திய முஸ்லீம்கள் தேசபக்தி மிக்கவர்கள் அவர்கள் எப்போதும் பயங்கரவாதத்திற்கு துணை போகமாட்டார்கள் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.  

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற அரசு விழாவொன்றில் பேசிய நக்வி   பயங்கரவாதத்தை எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கமாட்டார்கள், ஏனெனில் இந்தியாவில் தான் சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்.  

ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்.  அவர்களின் உடமைகள் சூறையாடப்படுகின்றன, ஏனெனில் அது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத நாடு என தெரிவித்தார்.