இந்திய வானொலி வரலாற்றில் முதல் முறையாக.....

இந்திய வானொலி வரலாற்றில் முதல் முறையாக.....

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தில்லி வானொலியில் "மாமன்னர் ராஜராஜ சோழர்" பற்றிய நிகழ்ச்சி இன்று இரவு 9.30மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்திர பிரஸ்தம் அலைவரிசை 366.3 மீட்டர்/819கி லும் எப்.எம் ரெயின்போவிலும் கேட்கலாம். இந்த நிகழ்ச்சியில் சிறந்த தமிழறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான திரு.கே.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தலைவர்களுள் ஒருவருமான தருண் விஜய் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளார். 

இவர் ஏற்கனவே, தில்லி வானொலியில் திருவள்ளுவர், ஔவையார், கண்ணகி,ஆண்டாள், ராணி வேலு நாச்சியார், ஸ்ரீ.நாராயண குரு மற்றும் மகாத்மா அய்யன்காளி ஆகியோரை பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றி தருண் விஜய் கூறுகையில்,"மாமன்னர் ராஜராஜ சோழர் இந்தியாவை ஆண்ட அரசர்களுள் முதன்மையானவர். அவர் தமிழ்த்தொண்டும், கலைத்தொண்டும் சம்யத்தொண்டும் ஆற்றியவர். அவர் வீரமும் ஈரமும் கொண்ட நல்ல அரசராக திகழ்ந்தார். அவரைப்பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்." என்றார்.

இதுவரையில் அக்பர், ஷாஜஹான் முதலியவர்களின் வரலாற்றையே கேட்டுகொண்டிருந்த வட இந்தியர்கள் முதல் முறையாக தென்னக அரசர் ஒருவரின் வரலாற்றை கேட்க இருக்கிறார்கள். "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்று புலம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.