இந்து தர்ம ஆச்சார்ய சபை மாநாடு

இந்து தர்ம ஆச்சார்ய சபை மாநாடு

குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள அர்த்த வித்யா ஆஸ்ரமத்தில் "இந்து தர்ம ஆச்சார்ய சபை"யின் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. 

இந்து சமயத் தர்மங்கள் இந்நாளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், எதிர்ப்புகளும், நீதிமன்றங்களின் தவறானத் தீர்ப்புகளினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களும் தீர்வு பெற, அகில இந்திய ஆச்சார்யர்கள் ஒன்றிணைந்து விவாதிக்க இருக்கின்றனர். நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர். 

தமிழகத்தில் இருந்து,  ஸ்ரீ ஸ்ரீ பேரூர் ஆதீனமும், திருப்பனந்தாள் ஸ்ரீமத் இளவரசு சுவாமிகளும், ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீகார்யம் ஸ்வாமிகளும் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ பொம்மபுரி ஆதீனமும் வரவுள்ளார்கள்.   

இம் மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்களும், Dr. சுப்ரமணியன் ஸ்வாமி மற்றும்  உச்ச நீதிமன்ற  மூத்த வழக்கறிஞர் திரு.வெங்கட்ரமணி அவர்களும் உரையாற்ற உள்ளனர். 

இம் மாநாட்டினை அர்ஷ வித்யா ஆசிரமத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ பரமாத்மானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள்.