இந்து மதத்தை விமர்சிப்பவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - ஆதீனம், மடாதிபதிகள் வேண்டுகோள்

இந்து மதத்தை விமர்சிப்பவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - ஆதீனம், மடாதிபதிகள் வேண்டுகோள்

இந்து மதத்தையும், இந்துமத தெய்வங்களையும் தரக்குறைவாக விமர்சிப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு, இத்தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இத்தேர்தல் மூலமாக இந்துக்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்று இந்துமத துறவிகள் கேட்டுக்கொண்டனர். 

உலகின் அனைத்து நாடுகளிலும், பெரும்பான்மையாக வாழும் சமூகங்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் தொன்மையான இந்து மதம், அதன் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், திருமணச் சடங்குகள், இந்து சமய நூல்கள் ஆகியவை கேலியும், கிண்டலும் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்து கடவுள்கள் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து சமயத்தை மட்டுமே அவர்கள் விமர்சிக்கின்றனர். எனவே, அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கும், கூட்டணிகளுக்கும் ஆதரவானவர்களோ, எதிரானவர்களோ இல்லை. இந்து மதத்துக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். பிற மதங்களின் தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை உயர்வாகப் பேசுவதும், இந்து தெய்வங்கள், இந்துமதச் சடங்கு, சம்பிரதாயங்களை மட்டும் அவமதிப்பதுமான இந்து விரோத சக்திகளை இந்துக்கள் ஒருமித்த கருத்தோடு எதிர்க்க வேண்டும். வெறுமனே அரசியல் லாபத்துக்காக மறைமுகமாக கோயிலுக்கு செல்பவர்களை ஆதரிக்கக் கூடாது.