இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

கேரளாவில் இந்து ஐக்கிய வேதிகா தலைவர் சசிகலா டீச்சர் கைதை கண்டித்து இந்து முன்னணி இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சித் தலைமையிலான அரசு, இந்து ஐக்கிய வேதிகா தலைவர் (கேரள இந்து முன்னணி) திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி கட்டி விரதம் இருந்து யாத்திரை சென்றபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயலாகும் இதனைக் கண்டித்தும், ஐயப்பன் கோவில் புனிதத்தை கெடுக்க தொடர்ந்து பண்பாடற்ற பெண்களை காவல்துறை பாதுகாப்போடு சபரிமலைக்கு அனுப்பிட சதி செய்யும் கம்யூனிஸ்ட்களின் தீய எண்ணத்தை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திட இருக்கிறது. சென்னை மாநகரில் இன்று 18.11.2018 ஞாயிறு       மாலை 5 மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகில்,இந்து முன்னணி மாநகரத் தலைவர்  ஏ.டி. இளங்கோவன் அவர்கள், தலைமையில்   ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.    இந்து முன்னணி மாநில  செயலாளர் த. மனோகரன்   இந்து முன்னணி மாநிலப் பொதுச்  செயலாளர்  சி. பரமேஸ்வரன் இந்து முன்னணி மாநிலப் பொதுச்  செயலாளர்  நா. முருகானந்தம் ஆகியோர்  கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

இதில் இந்து முன்னணியின் மாநகர, மாவட்ட, தொகுதி உட்பட அனைத்துப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.