இந்து முன்னணி துவக்கப்பட்ட பின்னணி

இந்து முன்னணி துவக்கப்பட்ட பின்னணி

 தேசிய அளவில் இந்து முன்னணியின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது.  பாரதத்தில் ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தவும் அவர்களது சமய நம்பிக்கைகளை காக்கும் வகையில் குரல் கொடுப்பதற்கும் ஏதேனும் அமைப்புகள் இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றன எனில் அது ஆர். எஸ் .எஸ் மற்றும் அதை சார்ந்த தேசிய அமைப்புகள் தான். குறிப்பாக இந்து முன்னணி.

இந்து முன்னணியின் தனித்தன்மையுடைய நடைமுறைகள் நாடு முழுவதுமே பின்பற்றப்பட்டு அயோத்தி முதல் ராம ஜென்ம பூமி வரை பல்வேறு போராட்டங்களில் நல்ல பலன்களைத் தந்துள்ளது.  தமிழக ஹிந்துக்களின் மனஉறுதி குறைந்த நிலையில் இந்து முன்னணி பிறந்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. 

மண்டைக்காட்டில் ஹிந்து பெண்கள் கிறித்தவர்களால் தாக்கப்பட போதும் மீனாட்சிபுரத்தில் ஒரு லட்சம் பட்டியலின மக்களை முஸ்லிம்களாக மதமாற்றவும் முயற்சிகள் நடந்த சூழலில்  அன்றைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களை சந்தித்து சிலர் மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தெரிவித்தபோது அவர் என்னால் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஆர்.எஸ்.எஸ் ஐ அணுகுங்கள் என்றார். இந்திரா காந்தி மிகச்சரியாகவே கணித்தார். ஹிந்து அமைப்புகள் மட்டுமே இதற்குகான தீர்வை காண இயலும் அந்த நேரத்தில் தலைவர்கள் முடிவெடுத்தனர்.

இந்து முன்னணி எனும் புதிய இயக்கத்தை வடிவமைக்கும் பணியை இராம. கோபாலன் ஜி யிடம் வழங்கப்பட்டது ஹிந்து சமுதாயம் விழுப்புறச்செய்யவும் ஊழியர்களை உருவாக்கவும் மாநிலம் முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார்.   எந்த விலை கொடுத்தும் சமுதாயத்திக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாரான செயல்திறன் உடையவர்களை கொண்டதாக இந்து முன்னணி அமைப்பை உருவாக்கினார்.

பிற்காலத்தில் பஜ்ரங்தள் அமைப்பு அத்தகைய குணமுள்ள தொண்டர்களை நாடு முழுவதும் தயார் செய்தது அண்ணல் அம்பேத்கரின் உணரவை, போராடு, ஒருங்கிணை என்ற மூன்று அறிவுரைகளை இந்து முன்னணி கடைபிடிக்க செய்தார். 1981 மார்ச் 13 இல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய கருவறையில் சிவலிங்கத்தை மீண்டும் நிறுவியதன் மூலம் இந்து முன்னணி முதலாவது வெற்றியை பதித்தது. 

இந்த வெற்றி ஒரு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது அன்றைய ஆர். எஸ். எஸ் இன் அகில பாரத தலைவர் பாலாசாகப் தேவரஸ்  இங்குள்ள மக்கள் இதை செய்யும் போது ஏன் அயோத்தியில் பின்பற்ற முடியாது? என வினவினார். இதுவே அயோத்தி ராமஜென்ம பூமி போராட்டத்திற்கான விதையாக ஸ்ரீ ராம்லாலா விக்ரஹத்தை குகை போன்ற இடத்திலிருந்து சரியான இடத்தில் அமைக்க வழிவகை செய்தது. ராமஜென்ம பூமி போராட்டத்தை வி. ஹெச். பி வழி நடத்தி செல்ல தீர்மானிக்கப்பட்டபோது ஸ்ரீ அசோக் சிங்கல் அதற்க்கு தலைமை பொறுப்பேற்றதும் அதன் பிறகு நடந்ததும் வரலாறு. நாடு முழுவதும் ஹிந்து மாநாடு நடத்தி வி. ஹெச் .பி ஹிந்து அடையாளத்தை வலியுறுத்தி காண்பித்தது.  

ஹிந்து ஐக்கிய வேதி, ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் போன்ற அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டன. மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் அதிகரித்து வருவதால் ஹிந்துக்கள் சிபான்மையினராக ஆகாமல் இருக்க ஹிந்துக்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கே .சி. சுதர்ஸசன் அவர்களின் கூற்று மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 

சிறுபான்மையினர் என்ற பெயரில் ஆணவமாக செயல்பட்டு ஹிந்துக்களை கேவலமாக நடத்திய சமயங்களில் இந்து முன்னணி நடத்திய பொருளாதார புறக்கணிப்பு மிகபெரிய பாதிப்புகளை ஹிந்துக்களை இழிவுபடுத்தியவர்களிடத்தே ஏற்படுத்தியது. இதை உதாரணமாக கொண்டு நாடு முழுவதும் மற்ற ஹிந்து அமைப்புகள் இம்முயற்சியை பின்பற்றின.  

இதற்க்கு அடுத்து ஹிந்து கடைகளில் தான் ஹிந்து பொருட்களை வாங்கவேண்டும் என அறைகூவல் ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் பிற்காலத்தில் பின்பற்றதாக அமைந்தது.  ராமசேதுவை தகர்த்து கால்வாய் அமைக்க திட்டம் தீட்டியபோது இராம.கோபாலன் பல்வேறு போராட்டங்கள், பிராத்தனை கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்தார். மொத்தத்தில் தமிழகம் ராமகோபாலன் அவர்களின் ஹிந்து சமுதாய விழிப்புணர்வுக்கான பணிகளுக்கு சோதனைகளமாகவும் சாதனைகளமாகவும் அமைந்தது இந்த முழற்சிகள் அனைத்தும் ஹிந்து அமைப்புகள் தங்களது போராட்டங்களுக்கு முன்னெடுத்து சென்றன.

இவைகளுக்கு காரணம் இராம. கோபாலன் அவர்களது சாதனைதான் என்று  கூறினால் அதை அவர் மறுத்துவிடும் அவரது தன்னடக்கம் அவரின் மீது மாறாத அன்பும் பற்றும் உடையவர்களாக நம்மை தாக்கியுள்ளது.