இந்து முன்னணி போராட்டம்

இந்து முன்னணி போராட்டம்

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் கைதை கண்டித்து, குலசேகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது.

தஞ்சாவூரில் நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூர் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து திங்கள் சந்தை ரவுண்டானாவில் நேற்று மாலை இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் இரணியல் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்து உமா திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் குலசேகரம் சந்தை அருகில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை குலசேகரம் போலீசார் கைது செய்து சென்று பின்னர் விடுவித்தனர் .