இந்து ராஷ்டிரத்தில்   முஸ்லீம்களுக்கும்  இடமுண்டு - மோகன் பகவத்

இந்து ராஷ்டிரத்தில் முஸ்லீம்களுக்கும் இடமுண்டு - மோகன் பகவத்

இந்து ராஷ்ட்ரம் என்பது முஸ்லீம்கள் இல்லாத தேசம் என்பது பொருளாகாது, அனைத்து இனமக்களையும் உள்ளடக்கியதே இந்து ராஷ்ட்ரம் ஆகும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது சங்கம் உலகளாவிய சகோதரத்துவத்தை நோக்கியே தன் பணிகளை செய்து வருகின்றது.  அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைத்து  பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பதே இந்து ராஷ்ட்ரம் ஆகும் என கூறினார்.