இந்து வாக்கு வங்கி ஏன் உருவாக்க வேண்டும்

இந்து வாக்கு வங்கி ஏன் உருவாக்க வேண்டும்

நாளுக்கு நாள் தேர்தல் கால கட்டங்களில் சிறுபான்மை மதத்தவர்கள் என கூறிக் கொண்டு, தங்களுக்கு சலுகை அளிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பது என்ற நிலை மாறி, பெரும்பான்மையான மதத்தை ஒடுக்க சிறுபான்மை வாக்கு வங்கி பயன்படுத்த துவங்கிய சம்பவமே, இந்து வாக்கு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழ தொடங்கியது.   ஒரு ஜனநாயக நாட்டில் வாக்கு அளிப்பது கடமை என்ற நிலை மாறி, பணத்துக்கும், இன்னும் பிற சலுகைகளுக்குமே தேர்தல் என்ற நிலை வந்துள்ளது.  இந்தியாவில் 1977க்கு பின்னர் சிறுபான்மையினத்தவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்கும் அரசியல்கட்சிகள், பெரும்பான்மையான மதத்தவர்களின் உணர்வுகளுக்கு கூட மரியாதை கொடுக்காமல், கொச்சைப்டுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியதின் விளைவும் இந்து வாக்கு வங்கி உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மகா கட்பந்தன் என்ற பெயரில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க முயன்றார்கள்.  இவ்வாறு கூட்டணிக்காக முயன்றவர்களில், மேற்கு வங்க முதல்வர் திருமதி மம்தா பானர்ஜியும், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபுநாயுடும் .  இவர்களின் முயற்சியின் பயனாக உத்திரபிரதேசத்தில் மாயவாதியின் பகுஜன் சமாஸ்வாதி கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.  இந்த இரு கட்சிகளின் நோக்கமே, இஸ்லாமியர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதும், இத்துடன் தலித்களின் வாக்குகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இனைந்துள்ளார்கள். 

தேர்தல் நடக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், இந்து வாக்கு வங்கி ஏற்படுத்த  வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது.  இந்து வாக்கு வங்கி ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தங்களுக்கு என ஒரு வாக்கு வங்கியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  தேர்தல் காலங்களில், இஸ்லாமியர்கள் மசூதியில் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப வாக்களிக்கிறார்கள்.  இஸ்லாமியர்களை போலவே கிறிஸ்துவர்களும் சர்சுகளில்  குருமார்களின் கட்டளைக்கு ஏற்ப வாக்களிக்கிறார்கள்.  இதன் காரணமாக அரசியல் கட்சிகள் இந்த இரு சிறுபான்மையின மக்களின் குரலுக்கு ஏற்ப ஆடுகிறார்கள். ஆகவே பாதிக்கப்படுவது பெரும்பான்மையான இந்து சமுதாயமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  


இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் தங்களின் ஒற்றுமையின் காரணமாக தங்களின் மதத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று வாக்களிக்கின்ற காரணத்தினால், தங்களை மதச்சார்பற்றவர்களாக கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், இந்து மதத்திற்கு எதிரான காரியங்களை செய்வதற்கு தயக்கம் காட்டுவதில்லை  ஒட்டு மொத்த சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கின்றது என்பது தான் முக்கியமான காரணமாகும்.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக, சில அரசியல் கட்சிகள் தேசத்தின் பாதுகாப்பிற்கு கூட ஆபத்தை விளைவிக்கும் நபர்களை தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்க தயக்கம் காட்டுவதில்லை. ஆகவே இந்து தர்மத்தை காப்பதற்காகவும், இந்து பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்கவும், என அறிவிக்கும் போதே ,  நாட்டின் பாதுகாப்பை காக்கவும் இந்து வாக்கு வங்கி ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


ஜம்மு காஷ்மீர் பற்றி எரிவதற்கு வாக்கு வங்கியே காரணமாகும்.  அங்கு வாக்கு வங்கியை நினைவில் வைத்தே அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.  அமர்நாத் கோவிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க 100 ஏக்கர் நிலத்தை அன்றைய முதல்வர் குலாம் நபி ஆசாத்  கோவிலுக்கு அளித்தார்,  அன்றைய வனத்துறை அமைச்சர் மெஹபூபா முப்தி சையத்தின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டது.  ஆனால் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக  தனது இஸ்லாமிய வாக்கு வங்கி சேதப்படும் என்பதற்காக அரசுக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டார்.  இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்தவுடன் காங்கிரஸ் கட்சியும் கோவிலுக்கு கொடுத்த நிலத்தை திரும்ப பெற உத்திரவு பிறப்பித்தார்கள்.  ஷாபானு விவகாரத்தில் ராஜீவ்காந்தி உச்ச நீதி மன்றத்திற்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வந்தார்.    இம்மாதிரியான சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது.  இவ்வாறு நடைபெறுவதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியே.          1967லிருந்து தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால், இந்துக்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி, சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுகின்ற அவல நிலை தொடர்கிறது.  


இட ஒதுக்கீடு         தமிழகத்தில் மத சிறுபான்மையின மக்களாகிய இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு அவசர சட்டம் 15.9.2007-ல் கொண்டு வரப்பட்டது.  இதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.  இதற்கு காரணம், தமிழக அரசு குறிப்பாக கருணாநிதி தனது குள்ள நரித தனத்தால், ஏற்கனவே 30சதவீத்ம் ஒதுக்கப்பட்ட பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 7 சதவீதத்தை பிரித்து கிறிஸ்துவர்களுக்கு 3.5 சதவீதமும், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும் ஒதுக்கீடு செய்தார் அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி. .  இதை தட்டிக் கேட்ட எவரும் முன் வரவில்லை.   பிற்பட்ட வகுப்பினரின் உரிமையில் 7 சதவீதம் குறைக்கப்பட்டதை எவரும் கேள்வி கேட்கவில்லை, கேள்வி கேட்டால் சிறுபான்மையினரின் வாக்கு போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக கேட்கவில்லை.  ஆகவே  பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமையில் 7 சதவீதம் குறைக்க்பட்டதை எந்த அரசியல் கட்சியும் ( பா.ஜ.க. தவிர) கேள்வி எழுப்பவில்லை.  ஆகவே இந்து வாக்கு வங்கி உருவாக்குவது மிகவும் முக்கியமானது.  ஏன் என்றால் இந்து வாக்கு வங்கி இருப்பின், இந்த இட ஒதுக்கீடு உடனடியாக வர வாய்ப்பில்லை.


இத்தருனத்தில் ஒரு விஷயத்தை நினைவுப் படுத்த வேண்டும், 2011-ல் மத்தியில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, மற்ற எல்லா துறைகளிலும் சிறுபான்மையினத்தவருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து சட்டம் பிறப்பித்து.  ஆந்திர பிரதேச உயர் நீதி மன்றம் மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு கூறியது.  இந்த தீர்ப்பு வெளியானவுடன், இஸ்லாமியர்கள் வைத்த கோரிக்கை, ” மத்திய அரசும், மதசார்பற்ற சக்திகளும் இணைந்து சட்ட ரீதியாக இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்றார்கள்.  இதுவே வாக்கு வங்கி அரசியல் என்பது தெளிவானது.   இதை போலவே, தமிழக அரசு இந்து பெண்களுக்கு சொத்து உரிமை சட்ட திருத்தம் 2005-ல் கொண்டு வந்தது,  இந்த சட்ட திருத்ததை கொண்டு வந்தவர் தமிழக அமைச்சர் சாதிக்பாட்சா,  தான் சார்ந்த இஸ்லாமிய பெண்களுக்கு சொத்து உரிமை கிடையாது என்பதை மறந்து விட்டு இந்து பெண்களுக்கு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வந்தார்.  இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை நம்பிதான் அரசியல்வாழ்வு உள்ளதாக நிணைக்கின்ற காரணத்தினால் இந்த அவல நிலை… 


வாக்கு வங்கி அரசியலை சிறுபான்மையினத்தினர் கையில் எடுத்த காரணத்தினால்,  ஜனநாயக நாட்டில் பட்வா என்ற பெயரில் நடந்துள்ள அட்டூழியங்களை கண்டு கொள்ளாமல் விட்ட அரசியல் கட்சிகள் உண்டு.  ராமநாதபுரத்தில்,  முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளே நுழைக் கூடாது என விளம்பர தட்டி வைத்த சம்பவத்தில், அதை கண்டித்து குரல் கொடுக்க எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை  சித்ரக்கோட்டை  என்ற  ஊரில் உள்ள முகமதியா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாற்று மத மாணவர்கள் தங்களது நெற்றியில் திலகம் வைத்திருந்தால், அதை அழித்து விட்டுதான் வகுப்பறையில் உட்கர முடியும்.  இதை தவறு என சுட்டிக்காட்டக் கூடா அங்கே உள்ள அரசியல்வாதிகள் முன் வருவதில்லை.   ஆட்சியாளர்கள் ஆளும் கட்சியின் கடைக் கண் பார்வையில் இருப்பதால், அவர்களும் சிறுபான்மையினத்தவருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.  இதற்கு மூலக் காரணம் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியாகும்.  வாக்கு வங்கி அரசியல் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறும் அபாயம் உள்ளது என்பது தெரிந்தும் , இஸ்லாமியர்களின் வாக்குக்காக வாய் திறப்பதில்லை. 


கலவரத்தின் காரணமாகவே அல்லது பயங்கரவாதத்தின் மூலமாகவே தாக்குதல் நடக்கும் பொது, இந்துக்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்க எவரும் வருவதில்லை.  1981-ல் மதுரை ரயில் நிலையத்தில் இந்து முன்னணியின் பொறுப்பாளர் திரு. கோபால்ஜி கடுமையாக தாக்கப்பட்ட போது, அந்த தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சி தங்களது கண்டனத்தை தெரிவிக்கவில்லை.  இதற்கு மாறாக சங்க பரிவார் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.  இந்துவை திருடன் என கூறிய கருணாநிதியை கண்டிக்கவில்லை.   1981லிருந்து தொடர்ச்சியாக தமிழகத்தில்  பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி.யின் பொறுப்பாளர்களை கொலை செய்த போது கூட சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை. 


1982- மார்ச்சு மாதம் மண்டைக்காடு சம்பவத்தில் அப்பாவி இந்துக்கள் பலர் காயமடைந்தார்கள், பலர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள்,  இதற்காக கொல்லப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற கூட ஆளும் கட்சியும் பிரதான எதிர்கட்சியும் கண்டு கொள்ளவில்லை.   ஆறுதல் கூற சென்றால் வாக்கு போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக செல்லவில்லை.  1981-ல் கன்னியாகுமரியில் குமாரும், 1989-ல் தம்மம்பட்டியில் செல்வராஜூம் இந்துக்களின் உரிமைகளுக்காக துப்பாக்கி சூடு பட்டு உயிர் நீத்தார்கள்.  இவர்களுக்கு அரசு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை.   இவர்கள் சார்ந்த இந்து வாக்கு வங்கி உருவாகவில்லை என்ற காரணத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.


திருநெல்வேலியில் ஒரு மசூதியில் ஒருவர் கொல்லப்பட்டவுடன், திருவாளர் மூப்பானர் உள்ளிட்டேர், இந்த கொலைக்கு காரணம் இந்து இயக்கங்கள் என பழி சுமத்தியவர்கள், தகப்பனுக்கும் மகனுக்கும் ஏற்பட்ட  கைகலப்பில்  மகனால் கொல்லப்பட்டார் என தெரிந்தவுடன், வாய் மூடி மௌனியாக காட்சியளி்த்தார்கள்.  கோவையில் கொல்லப்பட்ட இஸ்லாமியருக்கு ரூ5லட்சம் அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டது.  அதே கோவையில் போக்குவத்து காவலர் செல்வராஜ் இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட போது, அரசு நிதி உதவி செய்யவில்லை. 1983-ல் கழுகுமலையின் ராமர் கொல்லப்பட்டதில் துவங்கி சென்னையில் சுரேஷ்குமார் வரை கொன்றவர்களின் பட்டியல் நீன்டு கொண்டே போகும்.  பேராசிரியர் பரமசிவம் கொல்லப்பட்ட போதும், மதுரையில் ராஜகோபாலன் கொல்ல்பட்ட போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மனதில் நினைத்துக் ்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள். இன்று வரை தமிழகத்தில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்கப்படவில்லை..


சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை  மனதில் வைத்தே இரண்டு கழகங்களும் செயல்பட்டு வந்தன.  ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி விழாவை  சீர்குழைக்க முயலும் செயல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.   அரபு நாடுகளில் வாழ்வது போல், விநாயகர் ஊர்வலத்திற்கு தேலையில்லாத  கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும்.  மசூதி வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்றும், மாலை 6மணிக்குள் மசூதியை கடக்க வேண்டும் எனவும் உத்திரவு இடுவதும்,  இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமியர்கள் எந்தவொரு கோரிக்கை வைக்காமலே, காவல் துறையினர் சில இடங்களில் ஊர்வலத்திற்கு தடைவிதிப்பது விசித்திரமாக இருக்கும். 


ஜெலலிதாவின் முந்தைய ஆட்சியில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்.  ஆனால் அச் சட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாகவே அச்சட்டத்தை திரும்ப பெற்றார்.  மத மாற்ற தடை சட்டத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்குகள் கிடைக்காது என தெரிந்தவுடன் சட்டத்தை திரும்ப பெற்றார்.  இந்து கடவுள் போல் தங்கள் தலைவர்களை படம் வரையும் சம்பவங்களும் உண்டு.  கன்னி மேரியாக ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டவுடன், கிறிஸ்துவர்கள் மத்தியில் எதிர்ப்ப எழுந்தவுடன் வால்போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால் இந்து வாக்கு வங்கி இல்லாத காரணத்தினால் காளியாக சித்தரிக்கும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, ஆனால் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..

       

ஆகவே தான் இந்து வாக்கு வங்கி ஏற்படுத்த வேண்டும்.  இந்து வாக்கு வங்கி ஏற்படுத்த முடியாததற்கு காரணம், சாதி அரசியல் பல கட்சிகளில் விளையாடுவதால், இந்து வாக்கு வங்கி உருவாக்க தடை ஏற்படுகிறது.  கேரளத்தில் உருவாக்கியுள்ளது போல்,  இந்துHindu Ezhava community, Yogakshema Sabha, fishermen’s Deevara Sabha ஆகிய மூன்று அமைப்புகளையும் இந்து என்ற குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதை போல் தமிழகத்திலும் பல்வேறு சாதிய அமைப்புகளை இந்து என்ற குடையின் கீழ் கொண்டு வந்தால் இந்து வாக்கு வங்கி உருவாக்க முடியும்.  தமிழகத்தில் சாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்து என்ற சொல்லுக்கு கொடுப்பதில்லை.  கடந்து ஐம்பதாண்டு காலமாக தமிழகத்தில் திராவிட இயக்கம் இந்து என்றால் அது பார்பனரை குறிக்கும் சொல்லாக பிரச்சாரம் செய்ததின் விளைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  மெல்ல மெல்ல திராவிட இயக்கங்களின் கருத்துக்கள் செத்துக் கொண்டிருக்கின்றன, இத்தருனத்தில் இந்து வாக்கு வங்கி உருவாக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

       

இந்து வாக்கு வங்கி கிழக்கு பகுதியில் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.  அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் போன்ற மாநிலங்களில் இந்து வாக்கு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.   இன்னும் சில ஆண்டுகளில் மேற்குறிய மாநிலங்களில் பல மாவட்டங்கள் இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக மாறக் கூடிய ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்ததின் காரணமாக இந்து வாக்கு வங்கி உருவாகி வருகிறது.


- ஈரோடு சரவணன்