இந்த தீபாவளிக்கு பேஷன் "மோடி குர்தா"

இந்த தீபாவளிக்கு பேஷன் "மோடி குர்தா"

பிரதமர் நரேந்திர மோடி ஆடையணியும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. அவரது குர்தா மற்றும் கோட்டுக்கு நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் பல தலைவர்களும் ரசிகர்களாகியுள்ளனர். தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் னும் அவர்களில் ஒருவர். சமீபத்தில் தனது இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் கோட்களை  அவர் வியந்து பாராட்டினார். பிரதமரும் தமது நட்பின் அடையாளமாக அதே போன்ற கோட்களை தென் கொரிய அதிபருக்கு பரிசாக அனுப்பிவைத்தார்.

உள்நாட்டிலும் மோடி குர்தா மற்றும் கோட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் இவற்றை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய அரசால் நடத்தப்படும் காதி விற்பனை நிலையங்களில் மோடி குர்தா மற்றும் கோட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 1400  மோடி குர்தாக்கள் விற்பனையாவதாக அதன் தலைவர் வீ.கே.சக்சேனா தெரிவித்தார்.