இனி சல்லிஸா கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்

இனி சல்லிஸா கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்

*ஒப்போவின் ரியல் மீ நிறுவனம் 6,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 'A1' என்கிற புதிய ஸ்மார்ட் போன்களை  இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே ரியல் மீ 1,2 ஆகிய ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் வெளியிட்டது. அவை நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது. 2019ம ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

*பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் இனி சென்னையிலேயே தயாரிக்கப்பட உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா ஆலை இருந்த இடத்தில் ஃபாக்ஸ் கான் நிறுவனம் ஐ போன் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ரூ.2,500 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.