இன்று தமிழக அமைச்சரவை கூடியது

இன்று தமிழக அமைச்சரவை கூடியது

தமிழக அமைச்சரவை இன்று கூடியது. இதில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் புதிய தொழில்கள் துவங்குதல், தொழிற்சாலைகள் விரிவாக்கம் ஆகியவை செய்யப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் பட்ஜெட் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.