இன்று மகர ஜோதி தரிசனம்

இன்று மகர ஜோதி தரிசனம்

சபரிமலையில் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெறுகிறது. மகர ஜோதியை காண சுமார் 18 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 12ம் தேதி திருவாபரணம் எனப்படும் ஐயப்பனின் நகைகள் அடங்கிய பெட்டிகள் பந்தள அரண்மனையிலிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த திருவாபரணங்கள் இன்று மாலை சபரிமலை சன்னிதானம் சென்றடையும். அங்கு அந்த ஆபரணங்களுக்கு விசேஷ தீபாராதனைகள் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். 

மகர ஜோதி என்பது மலையாள மகர மாதத்தின் முதல் நாள் வானில் தோன்றும் மகர நக்ஷத்திரமாகும்.  சபரிமலைக்கு அருகில் உள்ள பொன்னம்பல மேடு என்ற இடத்தில் மகர ஜோதியும் அதே நேரத்தில் தோன்றும். இந்த வருடம் இந்த நிகழ்வு இன்று இரவு  நிகழ்கிறது.