இன்று விடுதலையாகிறார் அபிநந்தன் - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

இன்று விடுதலையாகிறார் அபிநந்தன் - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போது முழுமையான போர் அறிவிக்கப்படாத நிலையில், பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய அரசு திட்டவட்டமாக பாகிஸ்தானிடம் கூறியது. 

இதனையடுத்து ஜெனிவா ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுதலை செய்யப்படுவார் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அபிநந்தனின் விடுதலைக்காக எந்தவித ஒப்பந்தமும் செய்ய முடியாது, நிபந்தனையின்றி அவரை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்த அறிவிப்பை இம்ரான் கான் வெளியிட்டுள்ளார்.