இம்ரானுக்கு பாராட்டு - மன்னிப்பு கேட்ட பேராசிரியர்

இம்ரானுக்கு பாராட்டு - மன்னிப்பு கேட்ட பேராசிரியர்

மத்திய அரசை விமர்சித்த கல்லுாரி பேராசிரியரை, ஹிந்து அமைப்பினர், மன்னிப்பு கேட்க செய்தனர். கர்நாடகா உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, எம்.பி., பாட்டீலுக்கு சொந்தமான கல்லுாரியில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநிலம், விஜய்புராவில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ஒருவர், மத்திய அரசை விமர்சித்து, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், கருத்துகளை பதிவிட்டார்.பாக்., பிரதமர் இம்ரான் கானை பாராட்டியும், கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அந்த கல்லுாரிக்குள், சமீபத்தில் திடீரென புகுந்த, ஹிந்து அமைப்பினர், அந்த பேராசிரியரை வெளியே இழுத்து வந்து, மண்டியிட்டு, கைகூப்பி மன்னிப்பு கேட்க செய்தனர்.இது தொடர்பான, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 'இந்த சம்பவம் தொடர்பாக, எந்த புகாரும் வராததால், யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.