இம்ரான் கானுக்கு சுஷ்மா சவால் - மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயாரா?

இம்ரான் கானுக்கு சுஷ்மா சவால் - மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயாரா?

இம்ரான் கான் பெருந்தன்மையான வர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயாரா என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சவால் விடுத்துள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாதம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தினால் அந்நாட்டுடன் பேச்சு நடத்த இந்தியா தயாராக உள்ளது. தீவிரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் கைகோர்த்து செல்ல முடியாது. பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறிவைத்துதான் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சார்பில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எதற்காக நம்மை தாக்க வேண்டும்? ஐஎஸ்ஐ உளவு அமைப்பையும் பாகிஸ்தான் ராணுவத்தையும் அந்நாடு கட்டுப்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெருந்தன்மை மிக்கவர் என்று சிலர் சொல்கிறார்கள். அவர் பெருந்தன்மையானவர் என்றால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா? அவ்வாறு ஒப்படைத்தால் அவர் எவ்வளவு பெருந்தன்மையும் தாராள மனமும் கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சவால் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.