இம்ரான் கானை கிளீன் போல்ட் ஆக்கிய கைஃப்

இம்ரான் கானை கிளீன் போல்ட் ஆக்கிய கைஃப்

பாகிஸ்தான்  முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் தனது 100 நாட்கள்  ஆட்சியின்  சாதனை  குறித்து லாகூரில் பேசும் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று தங்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். தாங்கள் மத சிறுபான்மையினருக்கு பல சலுகைகளை அளித்து வருவதாக கூறும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகமத் கைஃப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,"பாகிஸ்தானில் பிரிவினையின் போது 20% சிறுபான்மையினர் இருந்தனர். இப்போது வெறும் 2% தான் உள்ளனர். ஆனால், இந்தியாவிலோ சிறுபான்மையினர் மக்கள் தொகை வளர்ந்து வந்திருக்கிறது. எனவே, பாகிஸ்தான் சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்று இந்தியாவிற்கு பாடம் நடத்த தேவையில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியரான மொகமத் கைஃப்பின் இந்த பதில் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்பதற்கு அடையாளமாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.