இரட்டை இலைக்கு லஞ்சம்  : தினகரனை விடுவிக்க முடியாது

இரட்டை இலைக்கு லஞ்சம் : தினகரனை விடுவிக்க முடியாது

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அந்த கட்சி உடைந்தது. கட்சியின் சின்னமான 'இரட்டை இலைக்கு' மதுசூதனன் அணியும், தினகரன் அணியும் உரிமை கோரினர். எனவே, சின்னம் முடக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சட்டபட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தினகரன் தாக்கல் செய்திருந்த மனு இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அருண் பரத்வாஜ் தினகரன் மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாகவும் அவரை விடுவிக்க முடியாது என்றும் கூறி வழக்கை வரும் டிசம்பர் 4ம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.