இரண்டு அவதூறு வழக்குகள்

இரண்டு அவதூறு வழக்குகள்

கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்,"பிரதமர் நரேந்திர மோடி சிவலிங்கத்தின் மீது இருக்கும் தேளை போன்றவர்" என்று கூறியதாக பேசினார். சசி தரூரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவர் மீது தில்லியை சேர்ந்தபாஜக தலைவர் ராஜீவ் பப்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து ராஜீவ் பப்பர், சசி தரூரின் இந்த பேச்சு இந்துக்களின்  மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதே சமயத்தில் பாஜகவினர் என்ற முறையில் பிரதமர் மீது மரியாதை வைத்திருக்கும் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுப்பதாகவும், அதனால் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதே போன்று சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் தமிழக அரசு பற்றியும் தமிழக முதல்வர் பற்றியும் பேசியவை ஆதாரமற்றவை என்றும் அவதூறு ஏற்படுத்தும் எண்ணத்தில் பேசப்பட்டது என்றும் தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.