இரண்டு நாட்கள் : இரண்டு கூட்டங்கள் : ஒரே இடம் : ஒரே குறிக்கோள்

இரண்டு நாட்கள் : இரண்டு கூட்டங்கள் : ஒரே இடம் : ஒரே குறிக்கோள்

மக்களவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள்  குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு  தலைநகர் தில்லியில் இன்று துவங்குகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை வகிக்கிறார். இதில் தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து அம்சங்களும் ஆராயப்பட உள்ளன. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிப்பார்கள்.

மக்களவை தேர்தலில் பாஜக  கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து ஆராய்வதற்காக இரண்டு நாள் தேசிய குழு கூட்டம் இன்று தில்லியில் துவங்குகிறது. இதனை பாஜக தலைவர் அமித் ஷா துவக்கி வைக்கிறார். நாளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவுரையாற்றுகிறார்.