இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா - ஒருவர் பாஜகவில் இணைந்தார்

இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா - ஒருவர் பாஜகவில் இணைந்தார்

குஜராத்தில் வரும் 12-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடவுள்ள நிலையில், அக்கட்சியின் இரு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததுடன் கட்சியிலிருந்தும் விலகியுள்ளனர். இதில் மூத்த தலைவரும், மனாவதார் தொகுதியின் 4 முறை எம்எல்ஏவுமான ஜவாஹர் சாவ்டா, பாஜகவில் இணைந்துள்ளார். மற்றொருவரான திரங்கத்ரா தொகுதி உறுப்பினர் பர்சோத்தம் சபரியா விரைவில் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, குஜராத்தில் கடந்த சில மாதங்களில் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.

ஜவாஹர் சாவ்டா தனது இந்த முடிவு குறித்து கூறுகையில், பாஜகவில் இணைய எனக்கு எந்த அழுத்தமும் இருக்கவில்லை. அமைச்சர் பதவிக்காக நான் பாஜகவில் இணையவில்லை. மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்யவே பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார்.