இறுதி போட்டியில் அமித் பங்கல்

இறுதி போட்டியில் அமித் பங்கல்

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பங்கல் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.  உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகின்றது.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமித்,  கஜகஸ்தானின் சேகன் பிபோசினோவை 3 -2   என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அமித் பங்கல், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.