இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கையில் சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் அதிபர் மைத்திரி பால சிறிசேனா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக்கினார். இரண்டு கட்சிகளும் தங்கள் பலத்தை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய நிலையில், அதிபர் சிரிசேனா நாடாளுமன்றத்தை கலைப்பதாக கூறியுள்ளார்.  2019 ஜனவரி மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது