இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு வரும் நிதி

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு வரும் நிதி

தொண்டுநிறுவனங்கள்    மூலம் நிதி பெறுவது : 

போதைப் பொருள்கள் கடத்துவது மூலமாகக் கிடைத்த நிதியை  போலவே, பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக  கிடைக்கும் நன்கொடைகள், இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குப் பயன் படுதப்படுகின்றன. . உலக முஸ்லீம் லீக் (Muslim World League), மற்றும் ரபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமி (Rabita al-Alam al-Islami) என்பவை. உலகிலேயே  முதன் முதலில் உருவாகிய  இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள்.    , 1978-ல் சவுதி அரேபிய அரசு உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (International Islamic Relief Organization) என்ற ஒன்றைத் துவக்கியதுபாகிஸ்தானில் இருக்கின்ற ஜமாத்-உத்-தாவா என்று அமைப்பின் மூலமாகவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைத்து வந்தது.    ங்கரவாத இயக்கங்களுக்கு நிதிவழங்குவதற்காகவே, இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் செயல்படுகின்றனஇதில் அமெரிக்காவிலிருந்து நான்கு, இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆறு, மற்றும் சவுதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், கனடா போன்ற நாடுகளிலிருந்தும்,  பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிக்கின்ற தொண்டுநிறுவனங்களும் அடங்குகின்றன.

                    அமெரிக்காவிலிருந்து செயல்படும் இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்களில் இஸ்லாமிய நிவாரணம் (Islamic Relief), முஸ்லீம் உதவி, (Muslim Aid), முஸ்லீம் கைகள்(Muslims Hands), நிவாரணம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கரங்கள் (Helping Hand for Relief and Development)  போன்ற நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவைஏழை இஸ்லாமியர்களுக்கு உதவி வழங்குவதற்கும், பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கும் கனடாவில் நிதி திரட்டப்பட்டதுதிரடப்பட்ட நிதியானது, எந்த நோக்கத்திற்காக திரடப்பட்டதோ அதற்குச் செலவிடாமல், காஷ்மீரில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஹிஸ்புல் முஜாஹூதின் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்திருப்பதாக, கனடா அரசின் ரெவின்யு பிரிவு தெரிவித்துள்ளதுஇந்த அமைப்பின் அறிக்கையின்படி $2,80,000 பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, மேற்படி நிதியானது காஷ்மீரில் உள்ள  ஹிஸ்புல் முஜாஹூதினுக்கு  வழங்கப்பட்டுள்ளதுஇஸ்லாமியத் தொண்டு நிறுவனமான இஸ்லாமிக் செசைட்டி ஆப் நார்த் அமெரிக்கா. நிதி வழங்கிய தொண்டு நிறுவனமாகும்.

             காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை [Jammu & Kashmir Affectees Relief Trust]  என்ற அமைப்பானது, 2011 மற்றும் 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும், உலகில் உள்ள இஸ்லாமியர்களிடம் ரூ600 கோடியை  தொண்டு காரியங்களுக்கு என நிதியை வசூலித்து, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிற்கு கொடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள்இதுபோக, இந்தத் தொண்டு நிறுவனம் தானாகவே  சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்து பயங்கரவாத அமைப்பினருக்கு  கொடுத்த்தாகவும் தெரிவித்தனர்.   ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் இயங்கிக் கொண்டு இருக்கிறதுபயங்கரவாதிகளுக்கு நிதிகொடுப்பது மட்டுமில்லாமல், பாகிஸ்தானிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவவும்  துணைபோயிற்று.    தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு  ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை மூலம் இருபது மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளதுமத்திய பிரதேச காவல்துறையினரும், டெல்லி காவல் துறையினரும் கூட்டாக சோதனை நடத்தியதில் இந்தச் செய்தி தெரிய வந்தது.

                  இதனிடையே , இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நூறு மில்லியன் டாலர் கொடுப்பதாக,  ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை வாக்குறுதி கொடுத்த விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதுஇந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கொடுப்பது மட்டுமில்லாமல், ஆயுதங்கள் வாங்குவதற்கு இடைத்தரகர்களாகவும் செயல்பட்டார்கள்இவ்வாறு செயல்படும் இந்த அமைப்பு சட்டபடி அமைக்கப்பட்டது என்றாலும், செயல்படும் விதம் சட்டவிரோதமானது என்பது உலகறிந்த உண்மையாகும்காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக துவக்கப்பட்ட என்.ஜி.. என பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த அமைப்பிற்கு கிடைக்கும் பெருவாரியான நிதியானது, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாக  தேசியப்புலனாய்வு தெரிவித்துள்ளது.

            2011, 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ600 கோடி அளவில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைத்துள்ளதுஇவ்வாறு கிடைத்த நிதியில் பெருவாரியான நிதியை வழங்கியது ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை. பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு நிவாரணப்பணி செய்வதற்கு என்ற காரணத்தைக்கூறி வெளிநாடுகளிலிருந்து  பெறப்பட்ட ரூ95 கோடியும் பயங்கரவாத அமைப்புகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.  2013 வருடம் ஆகஸ்ட் மாதம் தேசிய புலானாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பினருக்கு  100 மில்லியன் டாலர் வரை நிதி கிடைத்துள்ளது என்றும், இவ்வாறு நிதி கிடைக்க அதிக அளவில் வசூல் செய்த என்.ஜி.. ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை என்றும் தெரிவித்தார்கள் .

          2011லிருந்து இன்று வரை  ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு இந்நிறுவனம்.மூலமாகவே தொடர்ந்து நிதி உதவி வழங்கப்பட்டு வந்துள்ளதுமேற்படி நிதியானது ஹவாலா மூலமாகவே பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைத்துள்ளதுஇதன் தொடர்ச்சியாக சையத் அலி ஷா கிலானியின் அமைப்பினர் வெளிநாடுகளில் திரட்டிய நிதியை ஹவாலா மூலமாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியுள்ளார்ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை அமைப்பினர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினருக்கு வழங்கியது போலவே, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தாரீக்--ஜிகாத் இஸ்லாமி (Tehreek-e-Jihad Islami), ஹிஸ் அல் முஜாஹிதீன்--ஜிகாத் கமாண்டோஸ் (Hizb al-Mujahideen-I-Jihad Commandos), அல்லா டைகர் (Allah Tigers), போன்ற அமைப்புகளும் நிதி உதவி செய்துள்ளார்கள். .

       ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளையுடன், ஃபாலா--ஆலம் அறக்கட்டளை [Falah-e-Alam Trust] என்ற அமைப்பும் இணைந்து நிதிஉதவியை இன்று வரை செய்து கொண்டு இருக்கிறது.. இதற்கு முக்கியமான சூத்திரதாரிகள் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளையின் சேர்மன்  மொஹபூப் உல் ஹக், (Mahboob-ul-Haq), அதன் பொதுச் செயலாளர் மசூர் தார் (Masroor Dar) என்பவர்கள்.    ஜமாத்-உத்-தாவா அமைப்பிற்கு பாகிஸ்தான் முழுவதும் 50,000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், இவர்கள் மூலமாகவும் லஷ்கர் அமைப்பினருக்கு நிதி திரட்டப்படுகிறதுஇந்த அமைப்பினர் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உண்டியல் வைத்திருக்கிறார்கள்.  இஸ்லாத்திற்கு எதிராக இருப்பவர்கள்மீதும், இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக ஜிகாத் நடத்த நிதிஉதவி செய்யவும் என்ற வாசகத்தை எழுதி, உண்டியல் முன் வைத்து நிதி திரட்டப்படுகிறது.

       பாகிஸ்தானிலிருந்து பல்வேறு நாடுகளில் குடியமர்ந்துள்ள பாகிஸ்தானியர்கள் மூலமாகவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு  நிதி பெறப்படுகிறது. இந்த நிதியும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கிறதுஇதில் இங்கிலாந்து முதலிடம் வகிக்கிறதுகுவைத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் புத்துயிர் (The Revival of Islamic Society) என்ற நிறுவனத்தின் மூலமாக லஷ்கர்--தொய்பாவிற்கு தனிப்பட்ட முறையில்  நிதி கிடைக்கிறதுஇஸ்லாமிய நாடுகளில் உள்ள செல்வந்தர்களால் நிறுவப்பட்டுள்ள இந்த  தொண்டு நிறுவனங்கள், பெறுகின்ற நிதியில் பெருமளவு நிவாரண பணிகளுக்கு செலவிடுவதாக கூறிக்கொண்டாலும், நன்கொடையாகப் பெறும் நிதியில் முப்பது சதவீதத்திற்குமேல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியாகக் கொடுக்கிறார்கள்பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்--தொய்பாவிற்கு தொடர்ச்சியாக வரும்  நிதியானது, குவைத் நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் புத்துயிர்  என்ற அமைப்பின்மூலம் கிடைக்கிறது.

                14.12.2001 அன்று, குளோபல் ரிலிப் பவுன்டேஷன் (Global Relief Foundation) என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனைநடத்தியபோது, இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான அல்கயிதாவிற்கு நிதி உதவி செய்தது தெரியவந்ததுஹட்டிவா சென்டர் (Hatikva Center), புனித நாட்டிற்கு நிவாரணம், வளர்ச்சி அறக்கட்டளை (Holy Land Foundation for Relief and Development), அல்-வாப்பா-மனிதநேய அமைப்பு (al-Wafa Humanitatian Organization) போன்ற நிறுவனங்களுடன்  முக்கியமான தொண்டுநிறுவனங்களும் இணைந்து, இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கொடுக்கம் வகையில்  செயல்படுகின்றன.

               1997லிருந்து அதிக அளவில் காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளுக்கு,  சவூதி அரோபியாவிலிருந்து செயல்படும் தொண்டு நிறுவனமான அல்-வாப்பா-மனித நேய அமைப்பு (Al-Haramain Islamic Foundation), நிதி  வழங்கி வருகிறது.   1998-ல் தான்செனியா, கென்யா போன்ற இடங்களில் நடந்த தாக்குதலை நடத்திய அல்கொயிதா அமைப்பினருக்கு  ஆண்டுக்கு முப்பது மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டு வந்த்தாகவும்மேற்படி நிதியிலிருந்து லஷ்கர் அமைப்பினருக்கும் நிதியில் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளது.    சிரியா நாட்டில் உள்ள தி சிரியன் இஸ்லாமிக் முன்னணி (The Syrian Islamic Front) என்ற அமைப்பின் கீழ் ஆறு அமைப்புகள் செயல்படுகின்றன. , இந்த அமைப்புகள் துருக்கியில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுடன் உறவு கொண்டு நிதியை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

,இஸ்லாமிய பாரம்பரிய புத்துயிர்ப்பு சங்கம் (Revival of Islamic Heritage Society)  லஷ்கர் அமைப்பு உட்பட பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்துவரும் தொண்டுநிறுவனமாகும்இவர்கள் கூரியர் மூலமாகவே நிதியை அனுப்புகிறார்கள்மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் அல் அக்தர் அறக்கட்டளை, அல் ரஷீத் அறக்கட்டளை [Al Akhtar Trust, Al Rashid Trust]  ஆகியவை அதிக அளவில் அல்கொயிதா மற்றும் லஷ்கர் அமைப்பினருக்கு  நிதி உதவி செய்யும் தொண்டுநிறுவனங்கள்இந்த இரண்டு தொண்டுநிறுவனங்களும் அரசின் அனைத்து உதவிகளையும்அதாவது புயல், வெள்ளம் போன்ற நிவாரண நிதிகளைப் பெற்று, பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல் முஸாஹிதீனுக்கு  வழங்குகிறது. இந்த நிதியானது லன்டனிலிருந்து செயல்படும் உலக காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான டாக்டர் அயுப் தோக்கரால் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஹவலாமூலம் நிதி வழங்கி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இஸ்லாமிய நிவாரண அமைப்பு (Islamic Relief) என்ற நிறுவனம், அதன் வலைத்தளத்தில் காஷ்மீரைத் தனிநாடாகக் காட்டியுள்ளது.   இந்தியா காஷ்மீர்ப்பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்காகப் போராடும் இஸ்லாமியர்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, நிதியனுப்பி வருகிறதுஇந்த நிதியை காஷமீரில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பெற்றுவருகின்றனஇந்த நிறுவனம் உலகளாவிய நிறுவனமாகும்.   இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து., பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும்,  இஸ்லாமியநாடான மலேசியாவில் வாழும் இஸ்லாமியர்களிடம் குரான் வாசகத்தைக் காட்டியே ஜிகாத்திற்காக நிதி வசூலிக்கிறார்கள்இந்த நிதி கூட அண்டை நாடான இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்கு ஹவாலா மூலம்  நிதி வருகிறது.

இஸ்லாமிய நிவாரண அமைப்பு வெளிநாடுகளில் தன்னைத் தொண்டுநிறுவனமாகவே விளம்பரப்டுத்திக்கொண்டு  நிதி வசூல் செய்கின்றது.   .நா.சபையில் உள்ள பல்வேறு பிரிவுகள்கூட நிதி கொடுக்கிறார்கள்மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஆணைக்குழு (European Commission for Humanitarian Operations) 2.3 மில்லியன் பவுன்ட்  வழங்கியுள்ளதுஇந்தக் குழுவைப்போலவே அகதிகளுக்கான .நா.சபையின் உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees) தொண்ணூறு இலட்சம் பவுன்ட் வழங்கியுள்ளார்.நா.சபையின் வளர்ச்சி நிகழ்ச்சி அமைப்பு (United Nations Development Program) 1.6 மில்லியன் பவுன்ட் வழங்கியுள்ளதுஇவ்வாறு வசூல் செய்யும் நிதியானது பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பப்படுகிறது.

இந்தியாவில் உருவாகிய பயங்கரவாத அமைப்பான சிமிக்கும், தடைசெய்யப்பட்ட பின்னர் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பிற்கும் பல்வேறு தொண்டுநிறுவனங்கள் பணத்தை அள்ளித்தருகின்றனரியாத்தில் உள்ள உலக முஸ்லிம் இளைஞர் குழு [World Assembly of Muslim Youth]   என்கின்ற தொண்டு நிறுவனம் இந்தியன் முஜாஹிதீனுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கிறது.   இந்த நிறுவனத்தைப் போலவே குவைத்தில் உள்ள அனைத்துலக இஸ்லாமிய மாணவர் சங்க இணையமும்  [International Islamic Federation of Students Organisation],  சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய முஸ்லிம் ஆலோசனைக் குழுவும் [Consultative Committee of Indian Muslims] அதிக அளவில் இந்தியன் முஜாஹிதீன்  பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கொடுக்கின்றன.

இங்கிலாந்து நாட்டில் துவக்கப்பட்ட முஸ்லிம் உதவி (Muslim Aid) என்ற தொண்டுநிறுவனம், பங்களாதேஷில் உள்ள  `_ஜி என்ற அமைப்பிற்கு நிதி உதவி செய்கிறதுஇந்நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் ஜிகாத்திற்கு அதிக அளவில் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள்வைத்து நிதி வசூல் செய்கிறது.   பங்களாதேஷ் நாட்டின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு உளவுப்பிரிவும், ராணுவ உளவுப்பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில், பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினருக்கு பத்து இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்று தருவதாக கண்டனர்இதில் வேடிக்கை என்னவென்றால், ஜமாத்--இஸ்லாமி என்ற அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா அப்துஷ் ஷோபன் (Maulana Abdush Sobhan) என்பவர் முஸ்லிம் உதவிமையத்தின் பொறுப்பாளர் என்பது தெரியவந்த்து.

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் உதவி மையம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷீல் உள்ள  பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறதுநேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லாமல், கோம்பாக் [KOMPAK] என்ற அமைப்பின் மூலம் நிதி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள உளவு அமைப்பினர் தெரிவித்தார்கள்.  கோம்பாக்  அமைப்பினர் பங்களாதேஷீல் உள்ள ஹிஜ்புல் முஜாஹுத்தினுக்கு நிதி வழங்குவதாகக் கூறப்பட்டது. பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்கு முஸ்லிம் உதவி மையத்துடன் அனைத்துலக இஸ்லாமிய நிவாரண நிறுவனமும் [International Islamic Relief Organization] இணைந்து நிதி வழங்குகிறதுபங்களாதேஷில் உள்ள Muslim World League,  Wafa Humanitarian Organization,  Rabita Trusts,  Qatar Charitable Society,  Holy Land Foundation for Relief and Development,  Al-Aqsa Educational Fund  தொண்டுநிறுவனங்களுடன்  International Islamic Relief Organization இணைந்து நிதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 2001-ல் தடைசெய்யப்பட்ட சிமி, இந்தியன் முஜாஹிதின், லஷ்கர்--தொய்பா, ஜெய்ஜி முகமது போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்கள் அனைத்தும் உலக இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கமான அல்கயிதா மற்றும் ஹமாஸூடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகள்ஆகவே உலக பயங்கரவாத இயக்கமான அல் கயிதாவிற்கு கிடைக்கும் நிதியைக்கொண்டு, இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைத்து வருகிறதுஉலகிலுள்ள தொண்டுநிறுவனங்கள் தாங்கள் கொடுக்கும் நிதி எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு சென்றாலும், அனைத்து இயக்கங்களுக்கும் அந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறதுஹஸ்புல் முஜாஹூதின் அமைப்பிற்கு அதன் தலைவரான சலாலுதீன் மற்றும் ஒன்பது பேர்களுக்கு பாகிஸ்தான் அரசு அளித்த ரூ80 கோடியை, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நிதி அளித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தனர்மேற்படி நிதியை பாகிஸ்தான் அரசு தங்களது அரசு கஜானாவிலிருந்து கொடுக்கவில்லை, மாறாக போதைப்பொருள்கள் கடத்தியதில் கிடைத்த வருமானம், உலக முஸ்லீம் லீக், மற்றும் தி முஸ்லீம் உலக லீக் மூலமாக கிடைத்த நிதியையும் கொடுத்ததாக கைதானவர்கள் தகவல்கள் கொடுத்தார்கள்.

உலகில் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி வழங்கினாலும், நேரிடையாக வழங்குவதில்லைஅல் காயிதா அமைப்பினர், நிதியைப் பெறுவதற்காகவே இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட். (International Islamic Front) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இங்கிலாந்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் முஸ்லீம் உதவி (Muslim Aid), சவூதி அரேபியாயிலிருந்து செயல்படும் World Assembly of Muslim Youth,  Rabeta-al-Alam-al-Islami , இது தவிர வேறு பல தொண்டுநிறுவனங்கள் செயல்படுகின்றன.

இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும்  நிதி கொடுக்கிறார்கள்மசூதிகளுக்கும் மதரஸாக்களுக்கும் கொடுக்கும் நிதியானது அண்டைநாடுகளில் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கின்றதுஉலக முஸ்லீம் இளைஞர்களின் கட்டமைப்பு (World Assembly of Muslim Youth), பாகிஸ்தானில் புதிதாக பத்து மதரஸாக்களுக்கு நிதி உதவி அளித்துள்ளதுஇந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கும் பயங்கரவாத அமைப்பான அல்கயிதாவிற்கு கிடைக்கும் நிதி வழிகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றனஅல் கயிதாவிற்கு அதிக அளவில் நிதி வழங்கும்  தொண்டுநிறுவனம் உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்புஇதனுடன் நெருக்கமாக இருக்கும் அமைப்பு, வட அமெரிக்காவிலிருந்து செயல்படும் Benevolence International Foundation (BIF) என்ற அமைப்பாகும். இத்துடன்  Muslim World League,  Qatar Charitable Society     அமைப்புகள் அல் கயிதாவிற்கு நிதி வசூலித்து தரும் இஸ்லாமியத் தொண்டு அமைப்பாகும்

உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்பபின் (World Assembly of Muslim Youth) நிர்வாகி, சௌதி அரேபியாவின் இஸ்லாமியப் பிரச்சினையை கவனிக்கும் துறையின் அமைச்சரான ஷேக் சலால் பின் அப்துல் அஸிஸ் அல் அல் ஷேக் (Sheikh Saleh bin  Abdul Aziz Al al-Sheikh) என்பவர். சௌதி அரேபியாவின் மன்னர் குடும்பம் நிதி வழங்கும் முக்கியமான அம்சமாகும்.  1996லிருந்து பாலஸ்தீனத்தில் இயங்கும் ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள I’tilaf al-Khir of Sheikh Qaradhawi  என்பவர்மூலமாகவே ஹமாஸுக்கு நேரடியாக நிதி வழங்கப்படுகிறது.   ஷேக் சலால் பின் அப்துல் அஸிஸ் அல் அல் ஷேக் (Sheikh Saleh bin  Abdul Aziz Al al-Sheikh) என்பவர்.  International Islamic Relief Organisation,  Charitable Foundation of al-Haramain என்ற மேலும் இரண்டு அமைப்புகளுக்குத் தலைமை ஏற்றுள்ளார்.. 1989லிருந்து இந்த இரண்டு அமைப்புகளிலிருந்து அல்காயிதாவிற்கும், அல் காயிதா மூலம் இந்தியாவில் இயங்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி அளிக்கப்படுகிறது.

உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்பு அல் காயிதாவிற்கு நிதி உதவி செய்யும் முக்கிய அமைப்பு என .நாசபை 19.12.2002ந் தேதி அறிவித்துள்ளதுமேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த இயக்கம் செயல்படுவதாகவும், ஒசமா பின்லேடனுடனும், அவரது இயக்கமான அல்காயிதாவுடன் உள்ள உறவைப்பற்றி விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுபங்களாதேஷில் உள்ள ஜமாத்--இஸ்லாமி என்ற அமைப்பிற்கும் நிதி உதவி செய்வது சௌதி அரேபியாவில் உள்ள மன்னர் குடும்பம்மீர் காசிம் அலி என்பவர் இடைத்தரகராக இருந்து செயல்படுபவர்பங்களாதேஷில் உள்ள இஸ்லாமி பேங்க்  பங்களாதேஷ் லிமிடெட் என்ற வங்கி தனது வருமானத்தில் 8 சதவீத்த்தை பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்குகிறது.   பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியில் கணிசமான அளவு, இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கிறது.

அல் கயிதா மற்றும் தாலிபான் ஜிகாதிகளின் மூலம் உருவான இயக்கம் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (Jama’tul Mjuahideen Bangaldesh), ஒவ்வொரு மாதமும் ஹூஜி அமைப்பு(Harkat ul Jehad Islam) பெரிய அளவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளான சஜெதூர் ரகுமான், ஹபீஸ் முஹம்மது இப்ராஹீம் என்பவர்கள் மூலமாக, பங்களாதேஷ் ஜமாத்உல் முஜாஹூதின்  அமைப்பின் பொறுப்பாளரான மௌலான சைதூர் ரஹிமான் என்பவருக்கு ஹவலா மூலம் அனுப்ப்ப்படுகிறது. ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்(Jama’tul Mjuahideen Bangaldesh, ஹூஜி,(Harkat ul Jehad Islam) அமைப்புகளையும் பங்களாதேஷ் அரசு தடைசெய்தாலும், அவர்களின் செயல்பாடுகளை தடைசெய்ய இயலவில்லைஅல் கயிதா அமைப்பின் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட் என்ற அமைப்பின் மூலமாகவே நிதியுதவி  ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷுக்கும், ஹூஜிக்கும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

ஆகவே இம் மாதிரியாக உலக முழுவதும் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நிதியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுகிறதுஇதில் இன்னும் ஆழமாக ஆய்வுசெய்தால், பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்இந்தியாவில் உள்ள பெரும் இஸ்லாமிய வியாபாரிகள், மற்றும் செல்வந்தர்கள் பெருமளவில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிவழங்குவதாகவும் தெரிகிறது.

-ஈரோடு சரவணன்