இஸ்லாம் மதத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்

இஸ்லாம் மதத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்

தில்லியில், ஈரான் நாடாளுமன்றத்தின் கலாசாரத்துக்கான குழுவினரை, நக்வி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட பிராந்தியத்துக்கோ, குறிப்பிட்ட நாட்டுக்கோ எதிரான அச்சுறுத்தல் அல்ல. அது, உலகின் மனித மாண்புகளுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.  பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளால் இஸ்லாம் மதம் ஒரு பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்போரை தனிமைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுசேர வேண்டும். 

உண்மையில், பயங்கரவாதம் என்பது இஸ்லாம் மதத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரிய எதிரியாகும் என சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். 

உலகில் அமைதி, வளர்ச்சி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.  சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நாம் பலப்படுத்த வேண்டும். சமூக மற்றும் மத நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா இருக்கிறது என்று கூறினார்.