ஈபில் கோபுரம் மூடப்பட்டது

ஈபில் கோபுரம் மூடப்பட்டது

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் முதலான அத்தியாவசிய பொருட்களின் வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகையால் அந்த நாட்களில் தீவிரமடைகின்றன. இந்த போராட்டங்கள் வன்முறை சம்பவங்களாக மாறி பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில் நாளையும் நாளை மறுநாளும் போராட்டம் தீவிரமடையும் என்றும் அப்போது பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி பிரான்ஸ் அரசாங்கம் அவற்றுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபில் கோபுரம் உட்பட அருங்காட்சியகங்கள், திரையங்குகள், கடைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருப்பதுடன், ஈபில் கோபுரம் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.