ஈ வே ராக்கு சிலை இங்கே! மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை எங்கே?

ஈ வே ராக்கு சிலை இங்கே! மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை எங்கே?

தனியார் தொலைக்காட்சி வேடிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

"சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் ராஜராஜ சோழனை பற்றி தவறாக பேசியதாக சொல்லி எல்லோருமே கோபத்தில் கொந்தளித்த கோபம் நியாயமானது இருந்தாலும் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு சில விஷயத்தை சொல்ல மறந்து விட்டோம்.

உலகத்தின் கவனத்தை இழுக்க கூடிய மெரினா பீச்சில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, கலைஞர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலை எல்லாம் இருக்கிறது. எங்கே போனது ராஜ ராஜ சோழன் சமாதி? எங்கே ராஜேந்திர சோழன் சமாதி? எங்கே சேரன் செங்குட்டுவன் சமாதி? எங்கே வேலுநாச்சியார் சமாதி? தமிழகத்தில் எங்கு இருக்கிறது பாண்டிய மன்னன் நினைவு மண்டபம்? எங்கே அழகுமுத்து நினைவு மண்டபம்? எங்கே சூரியவர்மன் நினைவு மண்டபம்? எங்கே இருக்கிறது குலோத்துங்கன் சிலை? எங்கே கரிகால சோழன் சிலை?

எங்கே பார்த்தாலும் பெரியாரோடு, பெரியார் சிலை, பெரிய நூலகம், பெரியார் பெரியார் பெரியார். அண்ணா அறிவாலயம், அண்ணா மணிமண்டபம், அண்ணா சாலை. இன்னும் சில காலங்களுக்குப் பிறகு அம்மா சாலை சின்னம்மா ரோடு என்றுகூட வரை இருக்கலாம். உலக சாம்ராஜ்யங்களை வென்று காட்டி நம் தேசத்திற்கு ஆங்கிலேயர்களை தேடி வரவழைத்த மன்னர்களுக்கு சரியான சிலைகளும் நினைவு மண்டபம் அமைக்க மறந்துவிட்டோம். வகுப்பறை பாடத்திட்டங்களில் கூட அவர்களுடைய வரலாறு சரியாக ஓங்கி ஒழிக்கப்படவில்லை அப்படி என்ன செய்துவிட்டார் இந்த தலைவர்கள் நான்கு புறமும் கடல் படையைக் கட்டமைத்து உலக நாடுகளை வென்று சோழப் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனைப் பற்றி இங்கு சரியாக கற்பிக்கப்படவில்லை.

தினம் தினம் கோவிலுக்கு செல்கிறோம் அந்த கோவிலை கட்டியது யார் என்றுகூட தெரியாமல் ஒருவேளை அந்த கோவிலை கட்டிய மாமன்னன் தன்னுடைய பெயரை பதிவிடாமல் போயிருந்தால் கூட அவருடைய பெருந்தன்மையை பாராட்டி நாமல்லவா நம்முடைய சந்ததிகளுக்கு சொல்லியிருக்க வேண்டும். இந்த கோவிலை கட்டியது இந்த மாமன்னர் என்று. இதோ பார் பசுவிற்காக நடந்த அநீதிக்காக தன் மகனையே கொன்ற மன்னரின் கல்லறை. இதோ பார் கஜினி முகமதுவை 17 முறை விரட்டியடித்த மாமன்னரின் கல்லறையை இதோ பார் தான் கட்டிய கோவிலில் தன்னுடைய பெயரை பதிவிடாமல் அதற்காக உழைத்த சிற்பக் கலைஞர்களின் பெயரை பதிவிட்ட ராஜராஜசோழனின் கல்லறைஎன்று நாம் காட்டியிருக்க வேண்டாமா?"