"உங்களுக்கெல்லாம் எதுக்கு விசாரணை?" நீதிபதிகள் ஆவேசம்

"உங்களுக்கெல்லாம் எதுக்கு விசாரணை?" நீதிபதிகள் ஆவேசம்

 சிபிஐயின் தலைவர் அலோக் வர்மாவிற்கும், கூடுதல் தலைவர் ராகேஷ் அஸ்தானாவிற்கும் பயங்கரமாக முட்டிக்கொண்டு விட்டதும், ஒருவர் மேல் ஒருவர் ஊழல் புகார் கூறியதும் அதனால், அரசு இருவரையும் விடுப்பில் அனுப்பிவிட்டு இருவர் மேல் உள்ள குற்றசாட்டுகள் குறித்து சிவிசி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்ததும் பழைய கதை. 

இந்த விசாரணை முடிந்து சிவிசி விசாரணை அறிக்கை, அதற்கு அலோக் வர்மா அளித்த பதில் ஆகியவை, மூடி சீல் இடப்பட்ட கவரில் உச்ச நீதிமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் ககோய், எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசெப் அடங்கிய  விசாரித்தது.ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கில் அலோக் வர்மாவிற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன்னிடம் சில ஆவணங்கள் கொடுத்து, "படித்து பாருங்கள், உங்களுக்கு நேரம் வேண்டுமானால் எடுத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்றனர்.

காரணம், மூடி சீலிடப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் அலோக் வர்மாவின் பதில்கள் ஆகியவற்றின் சில பகுதிகள் இடது சாரி ஆதரவு செய்தி ஊடகமான "தி வயர்"இல் வெளியாகியிருந்தது தான். அதை கண்டு பாலி நாரிமன்னும் அதிர்ச்சியடைந்தார். 

"உங்கள் யாருக்கும் விசாரணையே தேவையில்லை" என்று நீதிபதிகள் எரிந்து விழுந்துள்ளனர். அலோக் வர்மாவின் மனு மீதான விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மூடி சீலிடப்பட்ட மிக முக்கியமான விசாரணை அறிக்கை வெளியானது எப்படி? என்பது தில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.