உஜ்வலா திட்டத்தில் 7 கோடி எரிவாயு இணைப்புகள்

உஜ்வலா திட்டத்தில் 7 கோடி எரிவாயு இணைப்புகள்

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த 2016, மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது, 2019, மார்ச் மாதத்துக்குள் 5 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், 2021-க்குள் 8 கோடி இணைப்புகள் வழங்கும் வகையில் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினமான இன்று வரை, 7 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, தினமும் சராசரியாக 69,000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 87 சதவீத இலக்கை எட்டிவிட்டோம். 

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 1.26 கோடி இணைப்புகளும், மேற்கு வங்கம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முறையே 78 லட்சம், 77.51 லட்சம், 63.31லட்சம் , 55.34 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2014, மே மாதம் வரை நாட்டில் 55 சதவீத குடும்பங்களில் சமையல் எரிவாயு பயன்பாடு இருந்தது. தற்போது இது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார் தர்மேந்திர பிரதான்.